One World vs One Family - பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய சச்சின், யுவராஜ்.. வெற்றி பெற்றது யார்?
பெங்களூரு : குழந்தைகள் உடல் நலம் மற்றும் கல்வி தொடர்பான வலியுறுத்தி நடத்தப்பட்ட charity கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒன் வேர்ல்ட் அணியும் யுவராஜ் சிங் தலைமையிலான ஒன் ஃபேமிலி அணியும் பெங்களூருவில் டி20 போட்டி ஒன்றில் மோதியது.
இதில் டாஸ் வென்ற சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒன் வேர்ட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஒன் ஃபேமிலி தலைமையிலான அணியில் களமிறங்கிய டேரன் மேடி என்ற வீரர் அபாரமாக விளையாடி 51 ரன்கள் குவித்தார்.

அப்போது சச்சின் டெண்டுல்கர் பந்து வீசி அவருடைய விக்கெட்டை கைப்பற்றினார். இலங்கை அணியின் கழுவித்ரானா 22 ரன்களும், முகமது கைஃப் 9 ரன்களும் பார்த்திவ் பட்டேல் 19 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சிறப்பாக விளையாடிய யூசுப் பதான் நான்கு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 பந்தில் 38 ரன்கள் விளாசினார்.
இதேபோன்று கேப்டன் யுவராஜ் சிங் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என பத்து பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். இதனால் ஒன் ஃபேமிலி அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒன் வேல்ர்ட் அணி களம் இறங்கியது.

இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய நமன் ஒஜா 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சச்சின் டெண்டுல்கர் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 16 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். 50 வயதிலும் சச்சின் அபாரமாக விளையாடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதைப் போன்று தென்னாப்பிரிக்கா வீரர் ஆல்விரோ பீட்டர்சன் அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 74 ரன்கள் சேர்க்க அவருக்கு உப்புல் தரங்கா 29 ரன்கள் சேர்த்து நல்ல துணை யாக நின்றார். இறுதியில் ஒரு பந்துகள் எஞ்சிய நிலையில் ஒன் வேர்ல்ட் அணி ஆறு விக்கெட்டுகள் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியை ஏராளமான குழந்தைகள் இலவசமாக கண்டு களித்தனர்.


Click it and Unblock the Notifications