Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச பவுலர்களை வறுத்தெடுத்த தவான், விஜய் பார்ட்னர்ஷிப்! வலுவான நிலையில் இந்தியா!

பதுல்லா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் இருவரின் சிறப்பான ஆட்டத்தால், ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் இன்று தொடங்கியது.

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தடுத்தார், அடித்தார்

தடுத்தார், அடித்தார்

முதல் 5 ஓவர்களில் தடுத்தாடிய இந்திய வீரர்கள், அதன்பிறகு அடித்தாட தொடங்கினர். குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அதிரடியுடன், நேர்த்தியும் இருந்தது. ஒருமுனையில் தவான் அடித்தாடிய நிலையில், விஜய் மிகவும் பொறுமை காட்டி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

22.2 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. இந்நிலையில் 23.3 ஓவர்களின்போது, இந்தியா விக்கெட் இழப்பின்றி 107 ரன்களை எடுத்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. உடனே ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விஜய் 70 பந்துகளில் 33 ரன்களுடனும், தவான் 71 பந்துகளில், 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரன் மழை தொடர்ந்தது

ரன் மழை தொடர்ந்தது

இதையடுத்து சுமார் 4 மணி நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. மழை எந்த விதத்திலும், இந்திய வீரர்கள் ஆட்டத்தை பாதிக்கவில்லை. அவர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 31.3 ஓவர்களில் இந்தியா, விக்கெட் இழப்பின்றி 150 ரன்னை தொட்டது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்களை குவித்தது. தவான் 150 ரன்களுடனும், விஜய் 89 ரன்களுடனும் களத்தில் நின்றனர். ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில், மழை காரணமாக, இன்று 56 ஓவர்கள்தான் வீச முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

மொத்தத்தில், முதல் நாள் ஆட்டம் முழுவதும் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது. ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகியுள்ளது. ஏனெனில், ஆட்டத்தின் கடைசி இரு நாட்களும், பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகிவிடும் என்கின்றனர் பிட்ச் வல்லுநர்கள்.

புது சாதனை

புது சாதனை

வங்கதேசத்துக்கு எதிராக விஜய்-தவான் ஜோடி குவித்துள்ள 239 ரன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் புது சாதனையாகும். முன்னதாக, அந்த அணிக்கு எதிராக இந்திய முதல் விக்கெட் ஜோடி 175 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாகும்.

2 வருடங்கள் பிறகு ஹர்பஜன்

2 வருடங்கள் பிறகு ஹர்பஜன்

இப்போட்டியில், இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. ஹர்பஜன் சிங் 2 வருடங்களுக்கு பிறகு அணிக்குள் வந்துள்ளார். அஸ்வினும் 11 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார். வேகபந்து வீச்சு பொறுப்பை வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய மூவரும் பார்த்துக்கொள்ள உள்ளனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

விராட் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், அஜிங்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா.

வங்கதேச அணி விவரம்

வங்கதேச அணி விவரம்

முஷ்பிகுர் ரகிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கயேஸ், மொமினுல் ஹாக், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்கார், லிட்டோன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சுவகடா சோம், தைஜுல் இஸ்லாம், முகமது ஷாகித், ஜுபைர் ஹொசைன்.

Story first published: Wednesday, June 10, 2015, 18:44 [IST]
Other articles published on Jun 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+