Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘சேட்டை புடிச்ச பையன் சார்’.. பேருந்தில் தூங்கிய பிரித்வி, ஷர்துல்.. ரோகித் சர்மாவின் குசும்பு செயல்

லண்டன்: பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பிரித்வி ஷா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரிடம் ரோகித் சர்மா செய்த சேட்டை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் மழையினால் டிரா ஆன நிலையில் 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.

லார்ட்ஸில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இப்போட்டியில், நான்கு நாட்களில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருந்த நிலையில் கடைசி நாளில் இந்திய டெய்ல் என்டர்ஸ் பும்ரா, ஷமி இருவரும் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இங்கிலாந்து எதிராக மெகா இலக்கை நிர்ணயம் செய்தார்கள். இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 272 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கி, 120/10 ரன்கள் மட்டும் சேர்த்து 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

 இங்கிலாந்து முனைப்பு

இங்கிலாந்து முனைப்பு

அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹெட்டிங்லியில் துவங்கவுள்ளது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளதால், அடுத்த மூன்று டெஸ்ட்களிலும் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி செயல்பட்டு வருகிறது.

உடல் சோர்வு

உடல் சோர்வு

இதனிடையே இந்திய வீரர்களோ, போட்டி குறித்த பிரஷர்கள் இல்லாமல் ஜாலியாக வலம் வந்துக் கொண்டுள்ளனர். 2வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு லண்டனிலிருந்து வெள்ளிக்கிழமை அன்று இந்திய வீரர்கள் பேருந்தில் லீட்ஸ் மைதானத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர். இந்த பயணத்தின் போது இந்திய வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் பேச்சுலர்ஸான பிரித்வி ஷா மற்றும் ஷர்துல் தாக்கூர் பேருந்திலேயே நன்கு உறங்கியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

மிகவும் சோர்வாக இருந்துள்ள பிர்த்வி ஷா பேருந்து இருக்கையில் படுத்து உறங்கியுள்ளார். அதே போல ஷர்துல் தாக்கூர் பேருந்தின் இருக்கையில் கூட அமராமல், நடக்கும் பகுதியில் உறங்கிவிட்டார். இவர்கள் இருவர்களும் உறங்குவதை பார்த்த ஓப்பனிங் வீரர் ரோகித் சர்மா அதனை புகைப்படம் எடுத்தது மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஸ்டோரியாக வைத்து விட்டார். அதில் "தூங்குவது தான் வாழ்க்கை" என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Sunday, August 22, 2021, 17:51 [IST]
Other articles published on Aug 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+