Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டிகள்ல பங்கேற்காதது ரொம்ப கஷ்டமான முடிவுதான்... ஜோ ரூட் ஆதங்கம்

சென்னை : கடந்த 3 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்.

இந்நிலையில் அணியின் தொடர் போட்டிகளால் தன்னால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இது மிகவும் கடினமான முடிவுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான ஜோ ரூட்

சிறப்பான ஜோ ரூட்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் இன்னிங்சில் 218 ரன்கள் அடித்து அணியின் 227 ரன்கள் வித்தியாசத்திலான அபார வெற்றிக்கு காரணமாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் அமைந்துள்ளார். அடுத்து 2 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

வருத்தம் அளிப்பதாக கருத்து

வருத்தம் அளிப்பதாக கருத்து

இந்நிலையில் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பங்கேற்காமல் உள்ளது வருத்தம் அளிப்பதாகவும் அதில் பங்கேற்காமல் உள்ளது மிகவும் கடினமான முடிவு என்றும் ஜோ ரூட் வருத்தம் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று அதில் அனுபவத்தை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனர்ஜியை செலவழிக்க விரும்பவில்லை

எனர்ஜியை செலவழிக்க விரும்பவில்லை

இந்த ஆண்டில் தொடர்ந்து போட்டிகள் உள்ள நிலையில் தன்னுடைய எனர்ஜியை ஐபிஎல்லில் செலவழிக்க தான் விரும்பவில்லை என்றும் ரூட் தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அல்லது குறைந்தபட்சம் ஏலத்தில் பங்கேற்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜோ ரூட் உற்சாகம்

ஜோ ரூட் உற்சாகம்

நாளைய போட்டியையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய ஜோ ரூட், கொரோனா பாதிப்பையடுத்து முதல் முறையாக ரசிகர்களுடன் கூடிய மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். குறிப்பாக கிரிக்கெட் மீது மிகந்த ஆர்வம் கொண்ட இந்திய ரசிகர்ளுடன் இணைந்து விளையாடுவது குறித்து உற்சாகமாக உள்ளதாகவும் கூறினர்.

Story first published: Friday, February 12, 2021, 19:04 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+