மும்பை : இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முறியடித்திருக்கிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் ஒரே பிரிவில் இருக்கிறது.இரு அணிகளும் ஒன்பதாம் தேதி முடிவில் உள்ளது.
இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்திருக்கிறது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டின் டான் பிராட்மேன் என பாபர் அசாமை,ரசிகர்களை புகழ்வதுண்டு. பாபர் அசாம்,டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வந்தாலும் அவனுடைய ஸ்ட்ரைக் ரேட் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்னுடைய கேப்டன் பதவியை பாபர் அசாம், 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இழந்த நிலையில் தற்போது மீண்டும் கேப்டனாக அமர்ந்திருக்கிறார். இந்த சூழலில் பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் கொண்டு டி20 தொடர்கள் விளையாடுகிறது. இதில் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.
இதில் ஜாஸ் பட்லர் 84 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரின் 160 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதில் கேப்டன் பாபர் அசாம், வழக்கம்போல் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் 26 பந்துகளின் 32 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
எனினும் இந்த ஆட்டம் மூலம் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு ரோகித் சர்மா 3974 ரன்கள் அடித்திருந்த நிலையில், தற்போது பாபர் அசாம் 3987 ரன்கள் அடித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் விராட் கோலி 4037 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலியை முந்த வேண்டும் என்றால் பாபர் அசாம்க்கு வெறும் 51 ரன்கள் தான் தேவை. இதனால் டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து தொடரில் பாபர் அசாம் முதலிடம் வந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 13 ரன்கள் எடுத்திருந்தால் சர்வதேச ச கிரிக்கெட்டில் 4000 ரன்களை எட்டிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த போட்டியில் பாபர் அசாம் அடித்த ரன்கள் மூலம், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்று பெருமையும் அவர் பெற்றிருக்கிறார்.