Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs ENG: ஷாகின் ஆப்ரிடி அபார சாதனை.. ஒருநாள் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் ரெக்கார்ட் சமன்

லாகூர்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னணி வேகப்பந்துவீச்சாளருமான ஷாஹீன் ஷா அப்ரிடி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் 4-வது ஒருநாள் போட்டியில் இந்தச் சாதனையை அவர் எட்டினார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ஷாஹீன் அப்ரிடி, போட்டியின் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் பேன்டனை 4 ரன்கள் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் தமது 80-வது ஒருநாள் போட்டியில் 150-வது விக்கெட்டை கைப்பற்றி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சாதனையை அவர் சமன் செய்தார்.

Shaheen afridi

ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 77 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்தியாவின் முகமது ஷமி மற்றும் பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் தலா 80 போட்டிகளில் இச்சாதனையை எட்டி இரண்டாவது இடத்தில் உள்ளனர். நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் 81 போட்டிகளுடனும், ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ 82 போட்டிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

IND vs NZ: இந்த 23 வயது வீரர் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது.. அப்படி ஒரு திறமை.. கையிப் பாராட்டு

IND vs NZ: இந்த 23 வயது வீரர் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது.. அப்படி ஒரு திறமை.. கையிப் பாராட்டு

சுழற்பந்துவீச்சாளர்கள் உட்பட உலக அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை நேபாள அணியின் சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே வசம் உள்ளது. அவர் 73 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.

இப்பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் 77 போட்டிகள் உடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தானின் சக்லைன் முஷ்தாக் 78 போட்டிகள் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முகமது ஷாமி, ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் தலா 80 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இணையாக நான்காவது இடத்தில் உள்ளனர். டிரென்ட் போல்ட் 81 போட்டிகள் உடன் மற்றும் பிரெட் லீ 82 போட்டிகள் உடனும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் சக்லைன் முஷ்தாக் 78 போட்டிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஷாஹீன் அப்ரிடி 80 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வாக்கர் யூனிஸ் மற்றும் சோயப் அக்தர் ஆகியோர் தலா 91 போட்டிகளுடனும், சயீத் அஜ்மல் 93 போட்டிகளுடனும் இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

IND vs NZ: புவனேஸ்வர் குமார் பவுலிங்கில் பெரிய குறை இருக்கு.. இதை செய்யலனா ரொம்ப கஷ்டம்- அஸ்வின்

Also Read

IND vs NZ: புவனேஸ்வர் குமார் பவுலிங்கில் பெரிய குறை இருக்கு.. இதை செய்யலனா ரொம்ப கஷ்டம்- அஸ்வின்

டாம் பேன்டனின் விக்கெட்டைத் தொடர்ந்து, தமது இரண்டாவது ஓவரில் ஜோ ரூட்டின் விக்கெட்டையும் ஷாஹீன் அப்ரிடி கைப்பற்றினார். இதன் மூலம் பாகிஸ்தான் மண்ணில் அதிக ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சோயப் அக்தரை 32 போட்டிகளில் 46 விக்கெட்டுகள் உடன் பின்னுக்குத் தள்ளி, ஷாஹீன் அப்ரிடி 28 போட்டிகளில் 47 விக்கெட்டுகள் உடன் முன்னேறியுள்ளார்.

Story first published: Sunday, October 25, 2026, 16:37 [IST]
Other articles published on Oct 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+