ஆரம்பமே அசத்தல்..! வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கில் பந்தாடப்பட்ட பாகிஸ்தான்.. 105 ரன்களுக்கு ஆல்அவுட்..!!
Recommended Video
நாட்டிங்ஹாம்: உலக கோப்பை தொடரின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நாட்டிங்ஹாமில், உலக கோப்பை தொடரின் 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், பாகிஸ்தானும் மோதின. மிக முக்கிய ஆட்டமாக இந்த ஆட்டம் கருதப்பட்டது. ஏன் என்றால், பாகிஸ்தானை பொருத்த வரை பயிற்சி ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. மேலும் கடந்த 10 ஒருநாள் போட்டியில் தோல்வியையே சந்தித்து உள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். ஃபகார் ஜமானும் இமாம் உல் ஹக்கும் முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து களமிறங்கினர். ஜமான் அதிரடியாக தொடங்க, தொடக்கம் முதலே திணறிய இளம் வீரர் இமாம் உல் ஹக், 11 பந்துகளில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து காட்ரெலின் பந்தில் வீழ்ந்தார்.
பின்னர் ஜமானுடன, பாபர் ஆசம் கைகோர்த்தார். அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜமானை 6வது ஓவரில் ரசல் வீழ்த்தினார். 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 22 ரன்களை அடித்த ஜமான், ரசலின் எக்ஸ்ட்ரா பவுன்சரை சமாளிக்க முடியாமல் அவுட்டானார்.
இதையடுத்து களத்திற்கு வந்த ஹாரிஸ் சொகைலையும் ரசலே வெளியேற்றினார். சொகைல் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவரில் வெறும் 45 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறிது.
அணியை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பில் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பாபர் ஆசமுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யானது. 14வது ஓவரை தாமஸ் வீச, அந்த ஓவரில் பாபர் ஆசம் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
62 ரன்கள் 4 விக்கெட்டுகள் காலி என்ற பாகிஸ்தான் திணறியது. கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவும் அனுபவ வீரர் முகமது ஹபீஸும் சேர்ந்து அணியை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் சர்ஃபராஸ் அகமதுவும் அவரை தொடர்ந்து இமாத் வாசிமும் ஹோல்டரின் ஒரே ஓவரில ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.
அதற்கு அடுத்த ஓவரிலேயே ஷதாப் கான் கோல்டன் டக்கானார். அடுத்து வந்த வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். 22வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. தாமஸ் அபாரமாக பந்துவீசி, 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.


Click it and Unblock the Notifications