Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கனவுல கூட நினைக்காதீங்க”.. ஹர்திக் பாண்ட்யா அடுத்த கேப்டனா??.. பாக். முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு

மும்பை: இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை கனவில் கூட நினைத்துப்பார்க்க கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதி சுற்றில் மோசமான தோல்வியுடன் வெளியேறியது. இதனால் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாகவும், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பேற்பார் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன.

கேப்டன்சி அறிவிப்பு

கேப்டன்சி அறிவிப்பு

வரும் ஜனவரி மாதம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணியை அறிவிக்கும் போது பாண்ட்யாவின் கேப்டன்சி குறித்த அறிவிப்பும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் இந்திய தேர்வுக்குழுவை ஒட்டுமொத்தமாக நீக்கி பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

சல்மான் பட் பேச்சு

சல்மான் பட் பேச்சு

இந்நிலையில் இது எதுவுமே நடக்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாண்ட்யாவை கேப்டனாக யார் பார்க்கிறார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. அதுபோன்ற கனவுகளை காணவே கூடாது. அவர் ஒரு திறமையான வீரர் தான். ஐபிஎல் தொடரில் ஒரு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ளார். ஆனால் அதற்காக இந்த முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

2 நல்ல ஆட்டங்கள்

2 நல்ல ஆட்டங்கள்

ரோகித் சர்மாவும் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுக்கொடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் ஒரு சில நல்ல ஆட்டங்களை அவர் வெளிப்படுத்தியிருந்தால் இதுபோன்ற பேச்சுக்களே வந்திருக்காது. ஆசிய கண்டங்களில் ஒரு போட்டியில் சொதப்பினால் கூட கேப்டனை மாற்ற வேண்டும் என உடனே கூறி விடுகின்றனர்.

நம்பிக்கை உள்ளது

நம்பிக்கை உள்ளது

இரு சர்வதேச அணியின் கட்டமைப்பு இயங்குகிறது என்பதை புரியாமல் சிலர் பேசி வருகின்றனர். ஏதாவது ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே கேப்டனை மாற்றுங்கள் எனக்கூறி வருகின்றனர். பிசிசிஐ இதில் எந்தவொரு அவசர முடிவை எடுக்காது என நம்புவதாக சல்மான் பட் கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 19, 2022, 14:09 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+