Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘பலே ஐடியா’.. ஐபிஎல் ஃபார்முலாவை கையில் எடுத்த பாகிஸ்தான்.. எதையுமே மாத்தல.. ஆனா ஒரு சிக்கல்!

பாகிஸ்தான்: ஐபிஎல் கவுன்சிலின் ஃபார்முலாவை பின்பற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் திட்டமிட்டு வருகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் அணி வீரர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனால் அந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

டி20 தொடர்

டி20 தொடர்

பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும், மீதமுள்ள 10 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 ப்ளே ஆட்டங்களும் லாகூரில் நடத்துவதாக இருந்தது.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

தொடரின் போது முதன் முதலில் லாகூர் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து 5 வீரர்களுக்கும், ஒரு பயிற்சியாளருக்கும் கொரோனா உறுதியானது. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் பி.எஸ்.எல்

மீண்டும் பி.எஸ்.எல்

இந்த தொடர் மீண்டும் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் 20ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக மே 22ம் தேதி முதல் அயல்நாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வருவார்கள் என கூறப்பட்டது. இந்நிலைஇல் அதில் சிக்கல் எழுந்துள்ளது.

காத்திருப்பு

காத்திருப்பு

இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த தேசிய செயல்பாட்டு மையத்தில் இருந்து அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஒருவேளை அனுமதி கிடைத்துவிட்டால், மீதமுள்ள போட்டிகள் அனைத்தையும் கராச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

 புதிய திட்டம்

புதிய திட்டம்

ஒரு வேளை தேசிய செயல்பாட்டு மையம் அனுமதி தரவில்லை என்றால் மீதமுள்ள தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகளும் முழுவீச்சில் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த எச்சரிக்கை

மிகுந்த எச்சரிக்கை

ஐபிஎல் தொடரின்போது பயோ பபுள் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டது. அதே போன்று பிஎஸ்எல் தொடரிலும் இந்த முறை சர்வதேச தரம்வாய்ந்த பாதுகாப்பு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அந்நிறுவனம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அணிகள் பின்பற்றுவதை கண்காணிக்கும் என அறிவித்துள்ளது.

Story first published: Thursday, May 6, 2021, 14:46 [IST]
Other articles published on May 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+