ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர்களை வைத்து PSL தொடரை நடத்த போகும் பாகிஸ்தான்! சிறப்பு பட்டியல் தயார்
லாகூர் : ஐபிஎல் தொடர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களது நாட்டில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.அந்த வகையில் பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற தொடரை நடத்தி வருகிறது.
இந்த தொடர் தற்போது பாகிஸ்தானுக்கு நல்ல வருமானத்தை பெற்று வந்தாலும், ஐபிஎல் மதிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த தொடருக்கு கிடையாது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை காலி செய்ய வேண்டும் என்பதற்காக தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஐபிஎல் தொடர் நடைபெறும் அதே காலகட்டத்தில் முதல் முறையாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் முடிவடைந்த பிறகு அதில் எந்தெந்த ஸ்டார் வீரர்கள் விலை போகவில்லையோ அவர்களை வைத்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர்,கேன் வில்லியம்சன், ஆதில் ரசித், அலெக்ஸ் கேரி,கேசவ் மகராஜ், சாய் ஹோப், ஜானி பாரிஸ்டோ, டேரல் மிட்செல் போன்ற வீரர்களை பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கு அழைத்து வர முயற்சிகள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக psl தொடரில் உள்ள அணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்த வீரர்களை எல்லாம் பி எஸ் எல் தொடருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து எந்தெந்த வீரர்கள் எல்லாம் ஏலத்தில் தேர்வாகவில்லையோ அந்த பட்டியலை தயார் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஏலத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடத்தப்பட்டது போல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஏலத்தையும் லண்டன் அல்லது துபாயில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடர் நடைபெறும்போது பிஎஸ்எல் தொடரும் நடைபெற்றால் பல வீரர்கள் பிஎஸ்எல் தொடரை புறக்கணித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை போகாத ஸ்டார் வீரர்களை வைத்து இந்த தொடரை நடத்தி முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது.
Story first published: Sunday, December 8, 2024, 19:48 [IST]
Other articles published on Dec 8, 2024


Click it and Unblock the Notifications