For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாசில் பிசிசிஐ ஏமாத்துறாங்க.. அது எப்படி இந்தியாவுக்கு சாதகமா விழும்? பாகிஸ்தான் ரசிகர் பரபர புகார்

தரம்சாலா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

Pakistan cricket fan accusing BCCI for toss fraud

இந்த நிலையில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தும் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் இந்திய அணி வென்ற அனைத்து போட்டிகளிலும் ரோகித் சர்மா சேசிங்கே தேர்வு செய்துள்ளார்.

இதன் காரணமாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பிசிசிஐ ஏமாற்றுவதாக டிவீட் ஒன்று போட்டு அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். அதாவது இந்தியாவுக்கு சாதகமான டாஸ் விழுவதால் உண்மையிலேயே டாஸ் அப்படிதான் விழுகிறதா இல்லை இவர்கள் அப்படி முடிவு செய்துவிட்டார்களா என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.

இது குறித்து டிவீட் போட்டுள்ள அந்த நபர் சர்வதேச போட்டிகள் நடைபெறும் போது டாஸ் கீழே விழுகிறது. அதனை போட்டி நடுவர் பார்த்து நீங்கள் தான் டாசை வென்றீர்கள் என்று கூறுகிறார். ஆனால் அந்த டாஸ் உண்மையிலே தலை விழுந்ததா பூ விழுந்ததா என்று ரசிகர்களுக்கு காட்டப்படுவதில்லை.இதில் ஒரு வெளிப்படை தன்மை இல்லை.

இதனால் ஒவ்வொரு முறையும் டாஸ் போடும்போது ரசிகர்களுக்கு அதனை தொலைக்காட்சியில் காட்ட வேண்டும் என்று அந்த ரசிகர் டிவீட் போட்டு உள்ளார். பாகிஸ்தான் ரசிகரின் அந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு டாஸ் என்ன விழுந்தது என்று காட்ட வேண்டும். அப்படி டாசை காட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

Pakistan cricket fan accusing BCCI for toss fraud

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் டாஸ் விழுந்த போது அதனை தொலைக்காட்சியில் காட்டிய பிறகு தான் நீங்கள் பந்துவீச்சு தேர்வு செய்கிறீர்களா இல்லை பேட்டிங் தேர்வு செய்கிறீர்களா என்பதை கேட்பார்கள். ஆனால் அந்த நடைமுறை அனைத்து போட்டிகளுக்கும் தற்போது கடைப்பிடிப்பது இல்லை. இந்த நிலையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெறுவதால் பொறாமை பட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் இவ்வாறு பேசுவதாகவும், இதே பாகிஸ்தானுக்கு சாதகமாக ஏதேனும் நடந்தால் அதைப்பற்றி அவர்கள் வாயை திறக்க மாட்டார்கள் என்றும் இந்திய ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Sunday, October 22, 2023, 17:31 [IST]
Other articles published on Oct 22, 2023
English summary
Pakistan cricket fan accusing BCCI for toss fraud இந்தியாவுக்கு சாதகமாக விழும் டாஸ்.. பிசிசிஐ ஏமாத்துறாங்க.. குண்டை தூக்கி போட்ட பாகிஸ்தான் ரசிகர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+