Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுடன் தோற்றாலும் பரவாயில்லை.. இந்த தவறை செய்யாதீங்க.. பாபர் அசாம்க்கு பாக். வீரர் கோரிக்கை

லாகூர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவினாலும் இந்த ஒரு தவறை மட்டும் செய்ய வேண்டாம் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணி வீழ்த்தியது. இந்த நிலையில் அதை உத்வேகத்துடன் தற்போது இந்தியாவை நாளை எதிர்கொள்ள இருக்கிறது.

Pakistan EX cricketer Abdul Razak asks babar azam not to change team combination

இந்த நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் தற்போது உள்ள பாகிஸ்தான் அணி சமநிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்போது தான் அணி சரியாக இருக்கிறது. உங்களிடம் தரமான பேட்ஸ்மேன்கள், நடு வரிசையில் தரமான ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். உங்களிடம் வேகப்பந்து வீச்சும், சுழற் பந்து வீச்சும் முழு பலத்துடன் இருக்கிறது.

ஒரு கேப்டனுக்கு என்ன வேண்டுமோ அதை எல்லாம் தற்போது பாபர் அசாமிற்கு கிடைத்திருக்கிறது. இனி பாகிஸ்தான் அணி விளையாட போகும் அனைத்து போட்டிகளிலும் இதே அணியை பயன்படுத்துங்கள். இதுதான் உங்களுக்கு கிடைத்திருக்கிற சிறந்த அணி. இதே அணியை வைத்து நீங்கள் இந்தியாவிடம் தோல்வியை தழுவினால் கூட இந்த பிளேயிங் லெவலை கண்டிப்பாக நீங்கள் மாற்றக்கூடாது என்று பாபர் அசாமுக்கு அப்துல் ரசாக் கோரிகெ விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் டாப் நான்கு வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் நடுவரசையில் போதிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லை. இப்திகார் அகமது சிறப்பாக விளையாடினாலும் அவர் நேபாள் அணிக்கு எதிராக தான் இந்த இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். மேலும் நேபாள் அணிக்கு எதிராக பாகிஸ்தானின் தொடக்கம் வீரர்களும் தடுமாறினர். இந்த பாகிஸ்தான் அணியில் நிச்சயம் மைனஸ் இருக்கிறது. ஆனால் அப்துல் ரசாக் இந்த அணியை மாற்ற வேண்டாம் எனக் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Friday, September 1, 2023, 11:14 [IST]
Other articles published on Sep 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+