Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நோ பால் விவகாரம் - 2 நாள் ஆகியும் புலம்பும் பாகிஸ்தான்.. நடுவர் தவறு செய்ததாக பாக். வீரர்கள் புகார்

மெல்போர்ன் : டி20 உலககோப்பையில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தி 2 நாளாகியும் , தற்போது வரை நோ பாலால் தான் தோற்றதாக அந்நாட்டு ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் நவாஸ் வீசிய பந்து விராட் கோலியின் Waist க்கு மேல் சென்றது. இதனையடுத்து நடுவர்கள் அதனை நோ பால் என்று அறிவித்தனர்.

அந்த பந்து சிக்சர் சென்றது. மேலும் ஃபிரி வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணிக்கு பெரும் சாதகமாக அமைந்தது.

வசீம் அக்ரம் கருத்து

வசீம் அக்ரம் கருத்து

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வசீம் அக்ரம் பேசுகையில், நவாஸ் வீசிய பந்தின் உயரம் குறைந்து தான் வந்தது. அதனை நோ பாலா இல்லையா என்று சரியாக சொல்ல முடியவில்லை. வெறும் கண்களால் அந்த பந்தை பார்க்கும் போது நோ பாலாக தெரியவில்லை. ஆனால் ஸ்லோ மோஷனில் பார்க்கும் போது பந்தின் உயரம் குறைந்தது போல் தெரிந்தது.

தொழில்நுட்பம் எதற்கு?

தொழில்நுட்பம் எதற்கு?

ஆனால் , எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் நடுவரிடம் நோ பால் என முறையிடுவார். இதில் கோலி மீது எந்த தவறும் இல்லை. ஆனால் இது போன்ற பெரிய போட்டியில் நடுவர்கள் தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யாமல் பிரச்சினையை ஏன் உண்டாக்குகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வக்கார் யூனிஸ் கேள்வி

வக்கார் யூனிஸ் கேள்வி

இதனைத் தொடர்ந்து பேசிய வக்கார் யூனிஸ், பந்து நோ பாலா இல்லையா என்று Leg side நடுவர் தான் அறிவிப்பார். ஆனால் இம்முறை விராட் கோலி கேட்ட பிறகு நடுவர் எராஸ்மஸ், ரீப்ளேவை பெரிய ஸ்கிரினில் பார்த்த பிறகு தான் அதனை நோ பால் என அறிவிக்கிறார். நான் அது நோ பாலா இல்லையா என்ற சர்ச்சைக்குள் போக விரும்பவில்லை.

நடுவர்கள் மீது புகார்

நடுவர்கள் மீது புகார்

ஆனால் நடுவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். மெயின் நடுவரிடம் ஆலோசனை செய்த பிறகு, அதனை மூன்றாம் நடுவருக்கு அனுப்பி பார்க்க சொல்லி இருக்க வேண்டும். அதனை செய்யாதது பெரிய தவறு. அதற்காக தான் மூன்றாம் நடுவர் இருக்கிறார் என்று வக்கார் யூனிஸ் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சோயிப் மாலிக்கும், மூன்றாம் நடுவரின் உதவியை நாடாமல் விட்டது தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, October 25, 2022, 10:35 [IST]
Other articles published on Oct 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+