Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த பையன் உங்களுக்கு கிடைச்சது பெரிய லக்..!! இந்திய வீரரை சகட்டுமேனிக்கு புகழும் பாக். ஜாம்பவான்

இஸ்லாமாபாத்: இந்திய அணிக்கு ரோகித் சர்மா கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் சிறந்த, அதிரடியான ஹிட் மேன் ரோகித் சர்மா. ஐசிசி ஒருநாள் தர வரிசையில் விராட் கோலிக்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கிறார். கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே வெறும் 5 புள்ளிகள் தான் வித்தியாசம் உள்ளதால், விரைவில் முதலிடத்துக்கு வர ரோகித்துக்கு வாய்ப்பு இருக்கிறது.

Pakistan former player zaheer abbas praises rohit sharma

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அவரது சாதனைகளை யாருமே நெருங்க முடியாத படி உள்ளது. 3 இரட்டை சதங்கள், 7 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார்.

உலக கோப்பை தொடரில் 9 இன்னிங்சுகளில் ஆடி 5 சதங்களை விளாசினார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரராக ரோகித் சர்மா உள்ளார். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் குவித்தார்.

அந்த போட்டியை இரு நாட்டு ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இது குறித்து பேசிய பாக். முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ், ரோகித் சர்மாவை போன்று ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்றார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: பந்துகளை அவர் அபாரமாக கணித்து விளையாடுகிறார். பந்தை விரைவிலேயே கணித்துவிடுவதால் அருமையான ஷாட்டுகளை அடித்து தள்ளுகிறார். மற்ற வீரர்களை போல அவர் இல்லை. நிறைய விதமான ஷாட்டுகளை ஆடுகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென் ரோகித் தான் என்று கூறி உள்ளார்.

Story first published: Monday, July 22, 2019, 11:04 [IST]
Other articles published on Jul 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+