இலங்கை கிரிக்கெட் அணி பாக்.போகாம இருக்க இந்தியா தான் காரணமாம்..! இது எப்படி இருக்கு?
Recommended Video
இஸ்லாமாபாத்: இந்தியா மிரட்டியதால், பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுத்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் பவாத் உசேன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
2006ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். அதில், சில இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியானது. அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற பல அணிகளும் மறுப்பு தெரிவித்தன.

சுற்றுப்பயணம் தயார்
ஆனால் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இலங்கை அணி சம்மதித்தது. அதனையடுத்து வரும் 27ம் தேதி அக்டோபர் 9 வரை இலங்கை அணி பாகிஸ்தானில் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாட திட்டமிடப்பட்டது.

ஆலோசனை கூட்டம்
இது தொடர்பான ஆலோசனை கூட்டம், இலங்கை பாதுகாப்பு ஆலோசகரும், விமானப் படை கமாண்டருமான ரோஷன் தலைமையில் நடைபெற்றது. அதில் இலங்கை அணியின் மூத்த வீரர்கள் மலிங்கா, ஏஞ்சலா மேத்யூஸ் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

பங்கேற்க மாட்டோம்
பாகிஸ்தான் தொடர் குறித்த விவரங்களை கேட்டறிந்த அவர்கள் உள்ளிட்ட 10 முக்கிய வீரர்கள் இத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல்ரீதியானது
இலங்கை கிரிக்கெட் அணியினர் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த விவகாரம் பாகிஸ்தானில் அரசியல் ரீதியிலான பிரச்சனையாக மாறி இருக்கிறது. இலங்கை வீரர்களின் இந்த முடிவுக்கு , இந்தியாவின் தலையீடு இருப்பதாக அங்குள்ள அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி பேசி வருகின்றனர்.
அமைச்சர் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் அமைச்சர் பவாத் உசேன் நேரடியாக இந்தியா மீது புகார் பட்டியலை வாசித்திருக்கிறார். டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டியுள்ளது.

மலிவான செயல்
இந்திய விளையாட்டுத்துறையினரின் இத்தகைய செயல் கீழ்த்தரமான, மலிவான ஒன்று. விண்வெளி முதல் விளையாட்டு வரை பாகிஸ்தானுடன் இந்தியா மல்லுக்கட்டி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.


Click it and Unblock the Notifications