Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதிக்கு இந்தியா செல்ல ஐசிசி முயற்சித்தது.. பாக். வீரர் சையது ஆஃப்ரிடி பகீர் புகார்.. சர்ச்சை !

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என ஐசிசி முயற்சி செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சையது ஆப்ரிடி கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணி கடந்த புதன்கிழமை வங்கதேசத்தை எதிர்கொண்டது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது தொடக்க வீரராக களம் இறங்கிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடினார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

மழை குறுக்கிட்ட போது வங்கதேச அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 17 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஆனால் மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது.151 என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் கையில் இருந்தும் இந்த இலக்கை எட்ட முடியாமல் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆப்ரிடி புகார்

ஆப்ரிடி புகார்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆப்ரிடி, நீங்களே அடிலெய்ட் மைதானத்தை டிவியில் பார்த்து இருப்பீர்கள். அது எவ்வளவு ஈரமாக இருந்தது என்று உங்களுக்கே தெரியும். ஆனால் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டது. இந்தியா அரை இறுதிச்சுற்றுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஐசிசி பல்வேறு நடவடிக்கையை எடுத்தது.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நடுவர்கள் செயல்பட்டார்களோ அவர்களே தான் இந்த போட்டிக்கும் நடுவர்களாக இருந்தனர் .என்னை கேட்டால் அந்த நடுவர்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த நடுவர்களுக்கான விருதை வழங்கலாம் என்று அப்ரிடி ஏளனமாக பேசினார்.ஆப்ரிடியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொறாமை பேச்சு

பொறாமை பேச்சு

நேற்று பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா போட்டி நடைபெறும் போது களத்தில் மழை பெய்த பிறகும் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டதை ஆப்ரிடி எந்த கணக்கில் சேர்த்துக் கொள்வார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடப்பு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை விட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதால் அந்த நாட்டு முன்னாள் வீரர்கள் பொறாமையில் பேசி வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

Story first published: Friday, November 4, 2022, 17:45 [IST]
Other articles published on Nov 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+