Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை வீழ்த்தி விட்டோம் என மார்தட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்.. கழுவி ஊத்திய நெட்டிசன்கள்

கராச்சி: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ளார். ஒரு பொழுதுபோக்கு கிரிக்கெட் போட்டி வெற்றியை நாட்டின் பிரதமர் இவ்வளவு பெரிதுபடுத்துவதா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாங்காங் சிக்ஸஸ் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்தியா 6 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தது. ஷஷாங்க் சிங் மட்டும் 11 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, அப்பாஸ் அப்ரிடி மற்றும் கவாஜா நஃபேயின் அதிரடியால் வெறும் 3.5 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

Pakistan PM Shehbaz Sharif Trolled for Celebrating Hong Kong Sixes Win Over India

இந்த வெற்றியைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "ஹாங்காங் சிக்ஸஸ் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நமது வீரர்களுக்கு வாழ்த்துகள். வீரர்களைத் தயார்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்விக்கும் எனது பாராட்டுக்கள்" என்று புகழ்ந்து தள்ளியிருந்தார்.

அவரது இந்தப் பதிவைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் பிரதமரை வறுத்தெடுக்கத் தொடங்கினர். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியிடம் தொடர்ந்து அடிவாங்கி வரும் பாகிஸ்தான், வெறும் 6 ஓவர்கள் கொண்ட ஒரு கண்காட்சி கிரிக்கெட் தொடரின் வெற்றியைப் போய் உலகக் கோப்பையை வென்றது போல கொண்டாடுவதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

ஈஸியாக ஜெயிக்கலாம் என கனவு கண்ட ஆஸ்திரேலியாவை கதறவிட்ட முல்டர், ரிக்கல்டன்.. தென்னாப்பிரிக்கா சவால்

ஈஸியாக ஜெயிக்கலாம் என கனவு கண்ட ஆஸ்திரேலியாவை கதறவிட்ட முல்டர், ரிக்கல்டன்.. தென்னாப்பிரிக்கா சவால்

மேலும், பாகிஸ்தான் அணி ஏற்கனவே தனது முதல் போட்டியில் யுஏஇ அணியிடம் தோற்றிருந்தது. ஆனால் பிரதமர் தனது பதிவில் இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தானின் தொடக்க ஆட்டம் என தவறாகக் குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

Story first published: Saturday, October 31, 2026, 7:33 [IST]
Other articles published on Oct 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+