Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, ரோஹித் சர்மாவை விட அதிகம்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை புதிய சாதனை!

மும்பை : பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை சனா மிர் டி20 போட்டிகளில் புதிய சாதனை மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

சனா மிர் பாகிஸ்தான் அணிக்காக டி20 போட்டிகளில் நூறு போட்டிகளில் ஆடி புதிய சாதனை படைத்தார். இந்த சாதனையில் அவர் ஆடவர் கிரிக்கெட்டில் தோனி உட்பட பல நட்சத்திர வீரர்களை முந்தியுள்ளார்.

சனா மிர் சிறிய அறிமுகம்

சனா மிர் சிறிய அறிமுகம்

பாகிஸ்தான் மகளிர் அணியில் 2005 முதல் ஒருநாள் போட்டிகளிலும், 2009 முதல் டி20 போட்டிகளிலும் ஆடி வருகிறார் சனா மிர். சுழற் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என ஆல்-ரவுண்டராக பாகிஸ்தான் அணியில் கலக்கி வருகிறார் இவர். சர்வதேச அளவில் சிறந்த மகளிர் பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

என்ன சாதனை?

என்ன சாதனை?

சனா மிர் பாகிஸ்தான் அணிக்காக 100 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் இதுவரை இரண்டு போட்டிகளை மட்டுமே காயம் காரணமாக தவறவிட்டுள்ளார். இதன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியதுடன் பாகிஸ்தான் மகளிர் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் ஆடியவர் என்ற பெயரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மகளிர் பிரிவில் ஆறாவது இடம்

மகளிர் பிரிவில் ஆறாவது இடம்

தற்போது மகளிர் பிரிவில் அதிக டி20 போட்டிகளில் ஆடியவர்கள் பட்டியலில் ஆறாம் இடம் பிடித்துள்ளார் சனா மிர். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இன் டோட்டின் 110 போட்டிகளுடன் இருக்கிறார். இந்திய அளவில் ஹர்மன்ப்ரீத் கௌர் 93 போட்டிகள் ஆடியுள்ளதே இந்த பட்டியலில் அதிகம் ஆகும். அவர் 12ஆம் இடத்தில் இருக்கிறார்.

தோனி, ரோஹித் விட அதிகம்

தோனி, ரோஹித் விட அதிகம்

ஆடவர் கிரிக்கெட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஷோயப் மாலிக் 110 டி20 போட்டிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அப்ரிடி 99, தோனி 93, ரோஹித் சர்மா 90 போட்டிகளுடன் அடுத்த இடங்களில் இருக்கின்றனர். ஷோயப் மாலிக் தவிர மற்ற வீரர்கள் அனைவரையும் விட சனா மிர் உட்பட ஆறு வீராங்கனைகள் அதிக டி20 போட்டிகள் ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களை முந்தி வரும் பெண்கள்

ஆண்களை முந்தி வரும் பெண்கள்

மகளிர் கிரிக்கெட்டில் சமீப காலங்களில் ஆடவர் கிரிக்கெட்டை முந்தும் பல்வேறு சாதனைகள் பெரியளவில் பேசப்பட்டு வருகின்றன. இது அனைத்தும், விரைவில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு உலகில் முக்கிய இடத்தை பிடிக்கப் போகிறது என்பதற்கான சாட்சிகளே!

Story first published: Tuesday, February 5, 2019, 18:35 [IST]
Other articles published on Feb 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+