Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தல' டோணிக்காக பிரார்த்திக்கும் பாகிஸ்தானிய ரசிகர்!

இஸ்லாமாபாத்: உலகக் கோப்பை போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒரு பாகிஸ்தானியர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரைச் சேர்ந்தவர் முகமது பஷீர்(63). அமெரிக்காவின் சிகாகோ நகரில் கரிப் நவாஸ் உணவகத்தை வைத்து நடத்தி வருகிறார். கிரிக்கெட் பிரியரான அவர் ஸ்டேடியத்திற்கு சென்று போட்டிகளை காணும் பழக்கம் உள்ளவர். அவர் இம்முறை உலகக் கோப்பை போட்டி நடக்கும் அரங்கில் நின்று டோணி வெற்றி பெற பிரார்த்தனை செய்ய உள்ளார்.

இது குறித்து பஷீர் கூறுகையில்,

நான் கராச்சியைச் சேர்ந்தவன். ஆனால் சிகாகோவில் வசித்து வருகிறேன். என் மனைவி ராபியா இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். எனக்கு டோணியை மிகவும் பிடிக்கும். அவர் தான் என் ஹீரோ.

டி.சர்ட்

டி.சர்ட்

டோணி மீது கொண்ட அன்பால் தான் டோணி ஐ லவ் யூ என்று எழுதப்பட்ட டி சர்ட் வாங்கினேன்.

டி20

டி20

2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் எனக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அறிந்த டோணி இறுதிப் போட்டியை காண அவர் செலவில் டிக்கெட் வாங்கிக் கொடுத்தார். அவர் ஒரு சிறந்த மனிதர்.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

டோணிக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் இம்முறை நானே உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டை வாங்கிவிட்டேன். டோணிக்கு அவருக்கு அண்மையில் பிறந்த குழந்தை அதிர்ஷ்டத்தை அளிக்கட்டும்.

டோணி

டோணி

நான் 20 டாலர் டிக்கெட்டை தான் வாங்கியுள்ளேன். அங்கு அமர்ந்தே என் ஹீரோ டோணிக்காக குரல் கொடுப்பேன் என்றார் பஷீர்.

மூவர்ண கொடி

மூவர்ண கொடி

பாகிஸ்தானியராக இருப்பினும் அவர் சில போட்டிகளின்போது இந்திய கொடியை பிடித்து அசைப்பதை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 24, 2015, 16:35 [IST]
Other articles published on Feb 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+