Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்தில் நடந்த சுவாரசியம்.. கோஹ்லியால் செய்ய முடியாததை செய்த பாண்டியா குடும்பம்!

Recommended Video

இந்த வருடம் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் குடும்பம் இதுதான்

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது.

இதில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து இருக்கிறது. கோஹ்லியை விட சில அதிக விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாண்டியா குடும்பத்திற்கு இந்த ஒரு ஐபிஎல் போட்டியை வைத்தே வாழ்நாள் முழுக்க வாழும் அளவிற்கு பணம் கிடைத்து இருக்கிறது. குர்ணால் பாண்டியா ஐபிஎல் ஏலத்தில் மிக அதிக தொகைக்கு சென்று இருக்கிறார்.

கோஹ்லி ஏலம்

கோஹ்லி ஏலம்

இந்த ஐபிஎல் போட்டியில் கோஹ்லி பெங்களூர் அணியால் ஆர்டிஎம் மூலம் மீண்டு எடுக்கப்பட்டார். இவர்தான் இந்த ஐபிஎல் போட்டியில் விலை மதிக்க முடியாத நபர். இவர் மொத்தம் 17 கோடிக்கு எடுக்கப்பட்டார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

அதேபோல் ஹர்திக் பாண்டிய மும்பை அணியால் எடுக்கப்பட்டார். இவருடைய புதிய பார்மை பார்த்துவிட்டு இவருக்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. இவரை மும்பை அணி ஆர்டிஎம் மூலம் 11 கோடிக்கு எடுத்தது.

குர்ணால்

குர்ணால்

பாண்டியாவின் சகோதரரான குர்ணால் பாண்டியா அதேபோல் மும்பை அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் மொத்தம் 8.80 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார். இவருடைய குறைந்தபட்ச தொகையே 40 லட்சம்தான்.

பல கோடி

பல கோடி

இதை வைத்து கணக்கு பார்க்கும் போது மொத்தம் இருவரும் 19.80 கோடி சம்பாதித்து இருக்கிறார்கள். கோஹ்லி வாங்கிய 17 கோடியை விட இது அதிகம். அதேபோல் ஐபிஎல் போட்டியின் மூலம் 20 கோடி சம்பாதித்த ஒரே குடும்பம் இதுமட்டும் தான்.

ஆனாலும்

ஆனாலும்

ஆனாலும் கோஹ்லிதான் கெத்து என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அவர்கள் குழுவாக 20 கோடி சம்பாரித்த போது கோஹ்லி தனியாக 17 கோடி பெற்றுள்ளார். அதேபோல் இவர்தான் இந்த வருடம் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்.

Story first published: Sunday, January 28, 2018, 11:44 [IST]
Other articles published on Jan 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+