Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு ஒரு வெஸ்ட் இண்டீஸ்காரர்.. அதிரடி வீரர் ஹர்திக் பாண்ட்யா பற்றி நெஹ்ரா தடாலடி

ராஞ்சி: பரோடாவை சேர்ந்த ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யா என புகழாரம் சூட்டினார், சக வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா.

இந்திய அணியின் புதுமுக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. வேகப்பந்து வீசுவதோடு, அதிரடி பேட்டிங்கிலும் வல்லவர் இந்த பாண்ட்யா. குஜராத்தை சேர்ந்த ஹர்திக், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார் பாண்ட்யா. எப்போதும் முகத்தை ரொம்பவே அசால்டாக வைத்திருக்கும் பாண்ட்யா, பேட்டில் பந்து பட்டாலோ சிக்சரும் ஃபோருமாக பறக்கிறது.

நெஹ்ரா கருத்து

நெஹ்ரா கருத்து

4 வருடங்களுக்கு பிறகு அணிக்குள் இடம் பிடித்து கலக்கி வரும் ஆஷிஷ் நெஹ்ரா தற்போதைய இந்திய அணி குறித்து தனது கருத்துக்களை பிசிசிஐ தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். அப்போது பாண்ட்யா குறித்தும் பாராட்டினார் நெஹ்ரா.

நல்ல பவுலர்கள்

நல்ல பவுலர்கள்

நெஹ்ரா கூறியதாவது: ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா என இந்திய வேகப்பந்து வீச்சு துறை வலுவாக இருப்பதாகவே உணருகிறேன்.

டிப்ஸ் கொடுப்பேன்

டிப்ஸ் கொடுப்பேன்

இத்தனை ஆண்டு கால ஆட்டத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை இந்த இளம் வீரர்களுக்கு மடைமாற்றம் செய்து வருகிறேன். அவ்வப்போது, ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

வெஸ்ட் இண்டீஸ்காரர்

வெஸ்ட் இண்டீஸ்காரர்

ஹர்திக் பாண்ட்யாவை நான் பரோடாவை (குஜராத் நகரம்) சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்றுதான் கூறி அழைப்பது வழக்கம். ஏனெனில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை போலவே மிகவும் அசால்டான முகபாவம் கொண்டவர் அவர். இவ்வாறு நெஹ்ரா தெரிவித்தார்.

சிரமின்றி சிக்சர்

சிரமின்றி சிக்சர்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை போல சிரமமேயின்றி சிக்சர் விளாசும் கலையிலும் பாண்ட்யா பலே வீரர் என்பது நேற்றைய இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தை பார்த்தவர்களுக்கும் புரிந்திருக்கும். நெஹ்ரா ஒரு கில்லாடிதான் போலும்.

Story first published: Saturday, February 13, 2016, 10:54 [IST]
Other articles published on Feb 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+