Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிட்டயரின் போது இப்படி பேசாலாமா? வாய்ப்பு கொடுத்த கோலிக்கே ஆப்பு வைத்த பர்தீவ்.. என்ன சொன்னார்?

டெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் பட்டேல் தெரிவித்த சில கருத்துக்கள் பெரிய சர்ச்சையாகி உள்ளது. கேப்டன் கோலிக்கு எதிராக இந்த கருத்துக்கள் திரும்ப வாய்ப்புள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விக்கெட் கீப்பர் வீரர் பர்தீவ் பட்டேல் ஓய்வு பெற்றுள்ளார். தொடர் புறக்கணிப்பு காரணமாக கஷ்டப்பட்டு வந்த பர்தீவ் பட்டேல் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இவர் இருக்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

ஓய்வு

ஓய்வு

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பர்தீவ் அறிவித்துள்ளார். இவரை ஐபிஎல்லில் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் பெங்களூர் அணியில் கேப்டன் கோலிதான் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.ஒவ்வொரு வருடமும் கேப்டன் கோலிதான் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தார்.

மோசம்

மோசம்

ஆனால் வாய்ப்பு கொடுத்த கேப்டன் கோலிக்கு எதிராகவே பர்தீவ் பட்டேல் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். கோலிக்கு எதிராக இந்த கருத்துக்கள் திரும்ப வாய்ப்புள்ளது. பர்தீவ் பட்டேல் தெரிவித்த சில கருத்துக்கள் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

பர்தீவ் பட்டேல் தனது பேட்டியில், ரோஹித் சர்மா மிகவும் சிறந்த கேப்டன். ஒரு அணியை எப்படி உருவாக்க வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தொடரை எப்படி வெல்ல வேண்டும் என்று ரோஹித் சர்மாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கேப்டன்

கேப்டன்

அவருக்கு கேப்டன்சியை கொடுக்க வேண்டும். அவர் கேப்டன் ஆவதில் எந்த தவறும் இல்லை. இதனால் விராட் கோலிக்கு இருந்த பிரஷர் குறையும். நிறைய தொடர்களை ரோஹித் சர்மா வென்று காட்டி இருக்கிறார்.

டி 20

டி 20

அவர் டி 20 அணியின் கேப்டனாக இருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைத்தவர்தான் ரோஹித் சர்மா. அவர் கடினமான சூழ்நிலையில் கேப்டன்சியை நிரூபித்து உள்ளார்.

டி 20 உலகக் கோப்பை

டி 20 உலகக் கோப்பை

அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். டி 20 உலகக் கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக போட வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு பலன் அளிக்கும் என்று பர்தீவ் பட்டேல் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு கண்டிப்பாக கோலிக்கு எதிரான சூசகமான பேச்சு என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, December 10, 2020, 12:29 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+