6 அணிக்காக விளையாடியும் டோணியின் சீனியருக்கு வாய்ப்பில்லை
பெங்களூரு: இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல் சீசனில், 6 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ள விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலை இந்த முறை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் விக்கெட் கீப்பர்களுக்கான ஏலத்தில், பார்த்திவ் படேல், சாம் பில்லிங்கஸ், நமன் ஓஜா, ஜோனி பிரைஸ்டோ ஆகியோர் ஏலம் போகவில்லை.

அதே நேரத்தில் அம்பதி ராயுடுவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.8 கோடிக்கும், ராபின் உத்தப்பாவை ரூ.6.40 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஏலம் எடுத்தன.
தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலம் எடுத்தது. விருத்திமானா சாகாவை ரூ.5 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத்தும், குயின்டன் டி காக்கை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.2.8 கோடிக்கும் ஏலம் எடுத்தது.
முதல் மூன்று சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பார்த்திவ் படேல், 4வது சீசனில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, அதன் பிறகு, டெக்கான் சார்சர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன் என கிட்டத்தட்ட அனைத்து அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். தற்போது எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
Story first published: Saturday, January 27, 2018, 16:12 [IST]
Other articles published on Jan 27, 2018


Click it and Unblock the Notifications