Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப் கனவுக்கு வேட்டு வைக்குமா டெல்லி..இளம் ஸ்டாருக்கு வார்னர் கடைசி வாய்ப்பு.. அதிரடி உறுதி

தர்மசாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டம் வேண்டுமானால், குளிர் பிரதேசமான தர்மசாலாவில் நடைபெறலாம். ஆனால் ஐபிஎல் சூழல் எரிமலை வெடிக்கும் அளவுக்கு நெருப்பாக இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எஞ்சிய 2 ஆட்டங்களில் அவர் வென்றால், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால், பஞ்சாப்பின் கனவுக்கு வேட்டு வைக்கும் உத்வேகத்துடன் டெல்லி அணி உள்ளது.

PBKS Playing in do or die match with Delhi capitals with several changes

தர்மசாலாவில் கடைசி 10 ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீசய அணியே 7 முறை வென்று இருக்கிறது. இதே போன்று இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 16 முறையும், டெல்லி 15 முறையும் மோதி இருக்கிறார்கள். தர்மசாலாவில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் 2 முறை பஞ்சாப் அணி வென்று இருக்கிறது.

இதில் டாஸ் வென்ற ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எங்கள் விதி எங்கள் கையில் தான் இருக்கிறது. இந்த ஆடுகளம் புதுசாக இருக்கிறது. இதனால் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறோம். நெருக்கடி இல்லாமல் நம்பிக்கையுடன் விளையாடுங்கள் என்றே என் அணியினரிடம் பேசி இருக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் ரபாடா மற்றும் அதர்வா பிளேயிங் லெவனில் இடம்பெற்று இருப்பதாக தவான் கூறினார்.

PBKS Playing in do or die match with Delhi capitals with several changes

இதனைத் தொடர்ந்து பேசிய வார்னர், அழகான மைதானத்தில் விளையாடுகிறோம். நாங்களும் பந்துவீச தான் இருந்தோம். ஏனென்றால் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பிரித்வி ஷா இடம்பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, May 17, 2023, 19:21 [IST]
Other articles published on May 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+