For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெளியேறும் நிலையில் பஞ்சாப் அணி.. டெல்லி அணி வைத்த ஆப்பு.. ஷிகர் தவான் செய்த தவறு தான் காரணம்

தர்மசாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை, பஞ்சாப் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்ந்ததார்.ஆட்டத்தின் முதல் 3 ஓவர்களில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனதால், வார்னர் மற்றும் பிரித்வி ஷா பொறுமையாக விளையாடினர். ஆனால், அதன் பிறகு பஞ்சாப் அணி பந்துவீச்சை டெல்லி சிதறடித்தனர்.

PBKS star batsman Livingstone blasts 9 sixerswent vain as DC Won

இந்த சீசன் முழுவதும் சொதப்பிய பிரித்வி ஷா, இன்றைய ஆட்டத்தில் 8 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். கேப்டன் வார்னர் 2 சிக்சர், 5பவுண்டரிகளை அடித்து 31 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 94 ரன்களை சேர்த்தது.

இதனையடுத்து களத்திற்கு வந்த ரூசோவ், 37 பந்தில் 82 ரன்களை குவித்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும அடங்கும். பஞ்சாப் அணியில் சாம் கரண், ரபாடா ஆகியோருக்கு ஓவர் பாக்கி இருந்தது.ஆனால் ஷிகர் தவான் கடைசி ஓவரை சுழற்பந்துவீச்சாளருக்கு கொடுக்க, அந்த ஓவரில் டெல்லி அணி 23 ரன்களை விளாசி அசத்தினர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.

PBKS star batsman Livingstone blasts 9 sixerswent vain as DC Won

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் டக் அவுட் ஆனார். இதனையடுத்து கடந்த போட்டியில் சதம் விளாசிய பிராப்சிம்ரன் சிங் , இன்றைய ஆட்டத்தில் 19 பந்துக்கு 22 ரன்கள் சேர்த்தார். இதே போன்று பொறுப்பாக விளையாடிய ஆதர்வா 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில், அதிரடியாக விளையாட முடியவில்லை என்று கூறி அஸ்வின் வழியில் ரிட்டயர்ட் அவுட் ஆனார்.

அவருக்கு பதிலாக விளையாடிய ஜித்தேஷ் சர்மா டக் அவுட ஆனது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதே போன்று, ஷாரூக்கானும் சொற்ப ரன்களில் வெளியேற, தனி ஆளாக போராடிய விலிங்ஸ்டோன்48 பந்தில் 94 ரன்கள் விளாசினார். இதில் 9 சிக்சரும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS star batsman Livingstone blasts 9 sixerswent vain as DC Won
Story first published: Wednesday, May 17, 2023, 23:40 [IST]
Other articles published on May 17, 2023
English summary
PBKS star batsman Livingstone blasts 9 sixerswent vain as DC Won
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+