முல்லான்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக சாம் கர்ரன் கேப்டன் பதவியை ஏற்றார்.
2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய 27வது லீக் போட்டி முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக சாம் கர்ரன் டாஸ் போட வந்தார். இதை அடுத்து ஷிகர் தவான் எங்கே என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு பதில் அளித்த சாம் கர்ரன், ஷிகர் தவானுக்கு உடலில் வலி இருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தான் கேப்டனாக இந்தப் போட்டியில் செயல்பட இருப்பதாகவும் கூறினார். ஷிகர் தவானுக்கு பதில் துவக்க வீரராக அதர்வா டைடே களமிறங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் காயம் காரணமாக நீக்கப்பட்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் : ஜானி பேர்ஸ்டோவ், அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன் கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (க்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் வீரர்கள் : ராகுல் சாஹர், அசுதோஷ் சர்மா, வித்வத் கவேரப்பா, ஹர்பிரீத் சிங் பாட்டியா, நாதன் எல்லிஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் : சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் - கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், தனுஷ் கோட்டியான், கேசவ் மகராஜ், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்
ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பாக்ட் வீரர்கள் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், ஷுபம் துபே, நவ்தீப் சைனி, அபித் முஷ்டாக்