Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாமே காப்பி.. ஐபிஎல் ஃபார்முலாவை அப்படியே பின்பற்றும் பாகிஸ்தான்.. இதில் ஐசிசி-க்கே அட்வைஸ்!

அபுதாபி: ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ பின்பற்றிய அதே ஃபார்முலாவை வைத்து பிஎஸ்எல் தொடரை முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டம் போட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல் தொடரை மீண்டும் நடத்தி முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு அந்நாட்டு அரசிடம் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொடர்

பாகிஸ்தான் தொடர்

பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் உள்ள மைதானத்தில் முதலில் ஜூன் 5ம் தேதி தொடங்கி ஜூன் 20ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி வீரர்கள், ஊழியர்கள், நடுவர்கள் என அனைவரும் அபுதாபி சென்றடைந்து குவாரண்டைனை முடித்துள்ளனர். சில அணிகள் தங்களது பயிற்சி ஆட்டங்களையும் தொடங்கிவிட்டன.

அனுமதி பிரச்னை

அனுமதி பிரச்னை

தொலைக்காட்சி ஒளிபரபரப்பு குழுக்களுக்கு அனுமதி தர அபுதாபி அரசு இழுத்தடித்து வந்தது. குறிப்பாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க குழுக்களுக்கு அனுமதி கிடைக்காமலேயே இருந்தது. இதனால் பிஎஸ்எல் தேதிகள் தள்ளி சென்ற நிலையில் இறுதியாக வரும் ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 24ம் தேதி போட்டிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலை தடுக்க புதிய ஏற்பாடு ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. ஐபிஎல் தொடரின்போது 'ரெஸ்ட்ராட்டா' பயோ பபுள் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டது. அந்நிறுவனம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அணிகள் பின்பற்றுவதை கண்காணித்து போட்டிகளை பாதுகாப்பாக நடத்திக்கொடுத்தது. அதே போன்று பிஅஎஸ்எல் தொடரிலும் ரெஸ்ட்ராட்டா நிறுவனம் பணிபுரிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி வசீம் கான், நாங்கள் சிறந்த நிறுவனத்தை எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நியமித்துள்ளோம். டி20 உலகக்கோப்பை தொடரும் அமீரகத்தில் தான் நடைபெறவுள்ளது. எனவே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், ஐசிசி உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு ஒரு ஐடியாவை கொடுக்கும் என தெரிவித்துள்ளார். பல்வேறு நாட்டு வீரர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து போட்டிகளை நடத்த முன்மாதிரி போன்று இருக்கும்.

Story first published: Sunday, June 6, 2021, 17:06 [IST]
Other articles published on Jun 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+