Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானிலும் ஒரு "கிங்" பிரச்சினை!

கராச்சி: நம்ம ஊரில்தான் "கிங்கா..கிங் மேக்கரா" என்று சிலர் "ஜாலி"யாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், பாகிஸ்தானிலும் ஒரு "கிங்" பிரச்சினை கிளம்பியுள்ளது. வாசிம் அக்ரம்தான் சூதாட்டத்துக்கே "கிங்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கேலியாக கூறியுள்ளார்.

ஆசியாக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி படு மோசமாக விளையாடியது குறித்து விசாரிக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தனியாக ஒரு விசாரணைக் கமிட்டியையும் அது நியமிக்கவுள்ளது.

இதற்கு முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். இது தேவையில்லாதது என்று அவர் விமர்சித்துள்ளார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரியும், விசாரணைக் கமிட்டியின் தலைவராக செயல்படவுள்ளவருமான ஷகீல் ஷேக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பழைய கோப்புகளைத் திறக்கவா??

பழைய கோப்புகளைத் திறக்கவா??

இதுகுறித்து அவர் கூறுகையில், வாசிம் அக்ரம் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் தொடர்பான பழைய கோப்புகளை நான் திறக்க நேரிடும்.

சூதாட்டத்துக்கே கிங் அவர்தானே!

சூதாட்டத்துக்கே கிங் அவர்தானே!

சூதாட்டம் குறித்தெல்லாம் வாசிம் அக்ரம் பேசக் கூடாது. காரணம், அவர்தான் சூதாட்டத்துக்கே கிங்.... அவரை "king of swing" என்று கூறுவதை விட king of betting என்றுதான் அழைக்க வேண்டும்.

யோசித்துப் பேசவும்

யோசித்துப் பேசவும்

பேசுவதற்கு முன்பு அவர் யோசித்துப் பேச வேண்டும். பழையவற்றை அவர் மறந்து விடக் கூடாது. அவரது கோப்புகள் எல்லாம் பத்திரமாகவே இருக்கிறது. திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் திறக்க யோசிக்க மாட்டோம் என்றார் அவர்.

அது என்ன கோப்பு?

அது என்ன கோப்பு?

ஷகீல் சொல்லும் கோப்பு என்பது, கடந்த 2000மாவது ஆண்டு வாக்கில், பாகிஸ்தான் நீதிபதி மாலிக் கய்யூம் நடத்திய சூதாட்டப் புகார் குறித்த விசாரணையைத்தான் ஷகீல் சொல்கிறார்.

வாசிம் அக்ரமுக்கு ஆப்பு

வாசிம் அக்ரமுக்கு ஆப்பு

அதில் வாசிம் அக்ரமுக்கும் சூதாட்டத்துக்கும் தொடர்பு உள்ளதாக நீதிபதி மாலிக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தான் குறிப்பிட்டு இப்படிக் கூறியுள்ளார் ஷகீல்.

எங்களுக்கும் விளையாடத் தெரியும்

எங்களுக்கும் விளையாடத் தெரியும்

ஷகீல் மேலும் கூறுகையில்,எனக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியும். நானும் விளையாடியுள்ளேன். இதே வாசிம் அக்ரம் பந்தில் 2 சிக்சரும் அடித்துள்ளேன் என்றார் அவர்.

வாய் ஜாஸ்திதான்!

வாய் ஜாஸ்திதான்!

ஷகீலுக்கு சற்று வாய் ஜாஸ்திதான். வாசிம் அக்ரம் என்றில்லை, பல முன்னாள் வீரர்களை அவர் சகட்டுமேனிக்கு இதற்கு முன்பு விமர்சித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 9, 2016, 12:50 [IST]
Other articles published on Mar 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+