மீண்டும் மழைப்பொழிவா??.. இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி நடக்குமா?.. பெர்த் வானிலை நிலவரம் இதோ
பெர்த்: தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் மழைக்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது. முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி அசத்தியுள்ளது.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து அரையிறுதிக்கு செல்வதற்கான 3வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு டி20 உலககோப்பையில் முதல் சதம்.. 52 பந்துகளில் தென்னாப்பிரிக்க வீரர் சதம்.. ஆனாலும் ஒரு தவறு\

தென்னாப்பிரிக்காவுடன் மோதல்
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நாளை மாலை 4.30 மணியளவில் பெர்த் மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் பிரிவில் இந்திய அணிக்கு இனி இருக்கும் ஒரே கடினமான அணி தென்னாப்பிரிக்கா தான். அவர்களை வீழ்த்திவிட்டால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இதே போல 3 புள்ளிகளை பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்புக்காக காத்துள்ளது என்பதால் இந்த போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டி நடைபெறுமா?
ஆனால் இந்த போட்டி நடைபெறுமா என்பது தான் தற்போது ரசிகர்களின் பெரிய குழப்பமே. டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகள் மழையின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பெர்த் நகரத்திலும் தற்போது வானிலை மோசமாக இருப்பதால், இந்தியாவின் போட்டி ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வானிலை நிலவரம்
இந்நிலையில் வானிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது நாளை பெர்த் நகரத்தில் மதியத்தில் இருந்து மாலை வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் போட்டி நடைபெறும் நேரம் இரவு 7 மணி என்பதால் அப்போது வானம் மட்டுமே மேக மூட்டத்துடன் இருக்கும், மழைக்கு 30% வரை தான் வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. எனவே சிறிது மழைப்பொழிவு இருந்தாலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறலாம்.

இந்தியாவுக்கு சிக்கல்
அந்நாட்டு நேரப்படி இரவு நேரத்தில் தான் போட்டி நடைபெறுகிறது. அந்த சமயத்திம் மிகவும் மேகமூட்டம் இருக்கும் என்பதால், பனிப்பொழிவும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒருவேளை போட்டி நடைபெற்றால் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.


Click it and Unblock the Notifications