பிரிஸ்டல் : இங்கிலாந்து அணியின் துவக்க வீரராக இறங்கிய பில் சால்ட், அயர்லாந்து அணி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் இருந்தே தன் அதிரடியை துவங்கி மிரள வைத்தார்.
அதிலும் முதல் ஓவரின் முதல் நான்கு பந்துகளிலும் பவுண்டரி அடித்து தெறிக்க விட்டார் சால்ட்.
இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஆன ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி பிரிஸ்டல் நகரில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணியின் துவக்க வீரராக பில் சால்ட் - வில் ஜாக்ஸ் களமிறங்கினர். முதல் பந்தை பில் சால்ட் சந்தித்தார். அயர்லாந்து அணியின் மார்க் அடர் பந்து வீசினார். முதல் பந்திலேயே ஃபோர் அடித்த சால்ட், தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று ஃபோர் அடித்தார்.
அடுத்து நான்காவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து முதல் ஓவரிலேயே ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க விட்டார். முதல் ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தன.
அடுத்து நான்காவது ஓவரில் வில் ஜாக்ஸ் தன் பங்குக்கு முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்தார். அதே ஓவரில் சால்ட் இரண்டு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தன. இப்படி இருவரும் அதிரடியில் இறங்க, சால்ட் கொஞ்சம் ஓவராகவே அடித்து ஆடினார்.
22 பந்துகளில் எல்லாம் அரைசதம் அடித்து விட்டார் சால்ட். அப்போது போட்டியில் 34 பந்துகளே வீசப்பட்டு இருந்தது. அதன் பின்னும் ஓயாத சால்ட், அடித்தால் பவுண்டரி இல்லையேல் விக்கெட் என்ற முடிவில் ஆடி 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார்.
வில் ஜாக் 21 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்களும் சால்ட் காட்டிய அதே அசால்ட் மோடில் தான் ஆடினார்கள். கிராவ்லி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் டக்கட் அதிரடியாக அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 400 ரன்களை கடக்க வேண்டும் என்ற நோக்கில் ஆடியது.