Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போட்டிகளில் சிஎஸ்கே அணியில் இருந்து முஸ்தாஃபிசுர் ரஹ்மானை நீக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சிஎஸ்கே அணி அடுத்த 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

PL 2024 CSK vs SRH Theekshana to play in place of Mustafiqur Rahman for CSK in the Match against SRH

இதனிடையே சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களே சொந்த மண்ணில் தோல்வியடைய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனை கேப்டன் தோனி பெரும்பாலும் மாற்றியதே இல்லை. ஆனால் புதிய ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றதில் இருந்து சரியான பிளேயிங் லெவனை கண்டறிய முடியாமல் சிஎஸ்கே அணி திண்டாடி வருகிறது.

குறிப்பாக முதல் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த முஸ்தஃபிசுர் ரஹ்மான், கடந்த சில போட்டிகளாக மோசமாக பவுலிங் செய்து வருகிறார். சேப்பாக்கம் மைதானத்தில் முஸ்தஃபிசுர் ரஹ்மானின் கட்டர்ஸ் ஓரளவுக்கு நன்றாக எடுபட்டாலும், டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறார். இதனால் மீண்டும் தோனியின் வழியில் பயணிக்க ருதுராஜ் கெய்க்வாட் முடிவெடுக்க வேண்டும் என்று அட்வைஸ் எழுந்துள்ளது.

கடந்த சீசனில் தீக்சனா மீது எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், அவரை கடைசி வரை தோனி பிளேயிங் லெவனில் இருந்து நீக்கவில்லை. இதனால் அடுத்த போட்டியில் முஸ்தாஃபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக தீக்சனாவை கொண்டு வர சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு எடுக்கப்படும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பவர் பிளே ஓவர்களில் தீபக் சஹர் மற்றும் தீக்சனா இருவரும் வீசும் போது நிச்சயம் விக்கெட்டுகள் வீழ்த்த முடியும். அதேபோல் டெத் ஓவர்களில் பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இம்பேக்ட் பிளேயராக ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை கொண்டு வரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, April 25, 2024, 13:01 [IST]
Other articles published on Apr 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+