Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளே ஆப் சுற்றுகள் நாளை துவங்குகிறது... யார் யாருடன் விளையாட உள்ளனர்!

Recommended Video

ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகள் நாளை துவங்குகிறது- வீடியோ

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்து, பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நாளை துவங்குகின்றன. மும்பையில் நாளை இரவு நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. 8 அணிகள் தலா 14 ஆட்டங்கள் என, 56 ஆட்டங்கள் நடந்தன.

ஏப்ரல் 7ம் தேதி சிஎஸ்கே - மும்பை போட்டிகளுடன் இந்த சீசன் துவங்கியது. நேற்று இரவு சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்துடன் லீக் சுற்று முடிவுக்கு வந்தது.

இதில் 18 புள்ளிகளுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடத்தைப் பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 புள்ளிளுடன் 3வது இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.

சிஎஸ்கே - ஹைதராபாத் மோதல்

சிஎஸ்கே - ஹைதராபாத் மோதல்

நாளை முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் துவங்குகின்றன. மும்பையில் நாளை நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

கொல்கத்தா - ராஜஸ்தான்

கொல்கத்தா - ராஜஸ்தான்

23ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் 3 மற்றும் 4வது இடத்தைப் பிடித்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பைனல்ஸ் வாய்ப்பு

பைனல்ஸ் வாய்ப்பு

முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனல்ஸ் தகுதி பெற்றுவிடும். முதல் தகுதிச் சுற்றில் தோற்கும் அணியும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியும் இரண்டாவது தகுதிச் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, பைனல்ஸ் நுழையும்.

27ம் தேதி பைனல்ஸ்

27ம் தேதி பைனல்ஸ்

முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மும்பையில் 22ம் தேதி நடக்கிறது. எலிமினேட்டர் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 23லும், 2-வது தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25ம் தேதியும், பைனல்ஸ் மும்பையில் 27ம் தேதியும் நடக்க உள்ளன. இந்த அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு துவங்கும்.

Story first published: Monday, May 21, 2018, 10:29 [IST]
Other articles published on May 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+