வீரர்களை அடிமைகளாக்கி விட்ட ஐபிஎல்.. தூக்கி கடாசுங்க.. போத்தம் ஆவேசம்
லண்டன்: கிரிக்கெட் வீரர்களை கிட்டத்தட்ட அடிமைகள் போலாக்கி விட்டது இந்த ஐபிஎல். இதை முதலில் ஒழிக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் போத்தம் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவிடம் ஒரு நாள் போட்டிகளில் அடிமாட்டு ரேஞ்சுக்கு அடி வாங்கியுள்ள நிலையில் இந்தியாவின் ஐபிஎல் மீது பாய்ந்துள்ளார் போத்தம்.
ஐபிஎல் போக்கு கவலை தருவதாகவும், இது கிரிக்கெட்டை காலியாக்கி விடும் என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
போத்தம் பேட்டியிலிருந்து சில பாராக்கள்....!

கவலையாக இருக்கிறது
ஐபிஎல்லை நினைத்தால் கவலையாக இருக்கிறது. உண்மையில் பயமாகவும் இருக்கிறது. இது தொடரக் கூடாது.

உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்து
ஐபிஎல் உலக கிரிக்கெட் விளையாட்டுக்கே மிரட்டலாகவும், ஆபத்தாகவும் உள்ளது. கிரிக்கெட்டின் வரலாற்றையே இது மாற்றி விட்டு விடும் போலத் தெரிகிறது.

அடிமைகளாகி விட்ட வீரர்கள்
ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்கள் அடிமைகளாகி விட்டனர். மற்ற போட்டிகளில் அவர்களுக்கு நாட்டம் குறைந்து வருகிறது. கிரிக்கெட் வாரியங்கள் ஐபிஎல்லுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆதிக்கம் அழிய வேண்டும்
ஐபிஎல்லின் ஆதிக்கம் அழிய வேண்டும். ஏன் ஐபிஎல் போட்டிகளையே ஒழிக்க வேண்டும். அப்போதுதான் வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடும் மன நிலைக்கு வருவார்கள். பணத்திற்காக விளையாடினால் கிரிக்கெட் அழிந்து விடும்.

பெட்டிங்குக்கு வழி வகுக்கும் ஐபிஎல்
ஐபிஎல் போட்டிகள் சூதாட்டத்திற்குப் பொருத்தமான களமாக உள்ளது. அங்கிருந்துதான் ஊழல் ஊற்றெடுக்கிறது. இதற்கு நிறைய சம்பவங்கள் உதாரணமாக உள்ளன என்றார் போத்தம்.


Click it and Unblock the Notifications