இந்தியாவுக்காக விளையாடுனது தன்னம்பிக்கையை அதிகரிச்சுருக்கு... பிரசித் கிருஷ்ணா சொல்லியிருக்காரு
சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்று சமீபத்தில் விளையாடியுள்ளார் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா.
ஐபிஎல் 2021 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இன்றைய தினம் எஸ்ஆர்எச் அணிக்கு எதிராக அவர் விளையாடவுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்ததற்கான காரணம் குறித்து பிரசித் கிருஷ்ணா கூறியுள்ளார்.

3வது போட்டி
ஐபிஎல் 2021 தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய 3வது நாள் போட்டியில் எஸ்ஆர்எச் மற்றும் கேகேஆர் அணிகள் மோதவுள்ளன. இதனிடையே கேகேஆர் அணிக்காக விளையாடவுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா.

ஒருநாள் தொடரில் பிரசித் கிருஷ்ணா
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது அறிமுக போட்டியில் விளையாடினார் பிரசித் கிருஷ்ணா. தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார். இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அந்த போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்றது.

கனவு நனவான தருணம்
இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்க முன்பு இந்தியாவிற்காக விளையாடிய தான் தற்போது கேகேஆர் அணியில் இணைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பிரசித் கிருஷ்ணா. இந்தியாவிற்காக விளையாடியது தனது கனவு நனவான தருணம் என்றும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டத்திற்கு நகர்வு
இந்திய அணியில் பங்கேற்று விளையாடியதன்மூலம் தனது தன்னம்பிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களின்மூலம் இது சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தன்னம்பிக்கையுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பதற்றத்தை தணித்த விராட்
ஒருநாள் போட்டியில் விளையாடியபோது தனக்கு பதற்றமாக இருந்ததாகவும் விராட் கோலி மற்றும் மூத்த வீரர்கள் தனக்கு சிறப்பான அறிவுரைகளை வழங்கியதாகவும் அது சிறப்பாக கைகொடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார். இதன்மூலம் நெருக்கடி சூழல்களில் பாசிட்டிவ்வாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை தான் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications