Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்காக விளையாடறது சும்மா இல்ல... எவ்ளோ பெரிய கௌரவம்... சச்சின் பாராட்டு!

மும்பை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகியோர் அறிமுக வீரர்களாக பங்கேற்கவுள்ளனர்.

Playing for India is the highest honour: Sachin congratulates Suryakumar, Ishan, Tewatia on maiden call-up for T20Is

இந்நிலையில் இவர்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Playing for India is the highest honour: Sachin congratulates Suryakumar, Ishan, Tewatia on maiden call-up for T20Is

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் இறுதி இரண்டு போட்டிகள் வரும் 24ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து டி20 தொடர் துவங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் மூவருக்கும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று காயம் காரணமாக விளையாடாத வருண் சக்ரவர்த்திக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவம் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

Story first published: Sunday, February 21, 2021, 15:22 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+