Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னத்த டீம் எடுக்குறீங்க? பாகிஸ்தான் அணியைப் பார்த்து கடுப்பான பிரதமர் இம்ரான் கான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் படுமோசமாக தோற்று விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனுமான இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகளை அழைத்து உலகக்கோப்பை தயார் நிலை குறித்து பேசியுள்ளார்.

ஓய்வு

ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு சென்ற பாகிஸ்தான் அணியில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் சர்ப்ராஸ் கான், பாக்கர் ஜமான், ஹசன் அலி, பாபர் அசாம், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி ஆகிய முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை.

புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

அதே சமயம், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அனுப்பி வைத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. ஆனால், அந்த அணி படுதோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் எரிச்சலைடைந்து உள்ளனர். உலகக்கோப்பை தொடர் 2 மாதங்களில் நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததை கண்டு கொதித்துள்ளனர்.

அடடா... என்ன ஒற்றுமை.. ஒரே ஓவரில் சாதனை படைத்த சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி

குழப்பங்கள் ஏன்?

குழப்பங்கள் ஏன்?

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானியை அழைத்து ஏன் அணித் தேர்வில் இத்தனை குழப்பங்கள் என்பது குறித்து கேட்டுள்ளார்.

உறுதி அளித்தார்

உறுதி அளித்தார்

எஹ்சான் மானி தேசிய அணியின் அணித் தேர்வு சரியாக நடைபெறும் என உறுதி அளித்ததாக தெரிவித்தார். மேலும், இம்ரான் கான் அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் பாகிஸ்தான் முழுவதிலும் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாதான் காரணம்

இந்தியாதான் காரணம்

பாகிஸ்தான் பிரதமரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடுப்பேற்ற, இந்திய கிரிக்கெட் அணி தான் காரணம். எப்படி என கேட்கிறீர்களா? இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு நடந்த அத்தனை தொடர்களிலும் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்துகிறோம் என ஒரு காமெடி செய்தது. அதே காமெடியை, அப்படியே காப்பி அடித்து செய்துள்ளது பாகிஸ்தான்.

பெரிய அடி

பெரிய அடி

இந்திய அணிக்கு சிறிய பாதிப்பை கொடுத்த அந்த திட்டம், பாகிஸ்தான் அங்கு பெரிய அடியாக கொடுத்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் கேப்டனான அந்த நாட்டின் பிரதமரையே கடுப்பேற்றி உள்ளது. அடுத்த தடவை நல்ல டீமா பார்த்து காப்பி அடிங்கப்பா!!

Story first published: Thursday, March 28, 2019, 21:52 [IST]
Other articles published on Mar 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+