Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PM XI v IND -இந்திய அணி அபார வெற்றி! பார்முக்கு திரும்பிய கில்! ஜெய்ஸ்வால், ரானா அபாரம்..2 பேர் மிஸ்

கென்பேரா : ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக பிங்க் நிற டெஸ்ட் வரும் ஆறாம் தேதி தொடங்குகிறது. பிங்க் நிற பந்தில் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த டெஸ்ட் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் மழையால் இந்த போட்டி வெகுவாக பாதிக்கப்பட்டதால் இன்று இந்த ஆட்டம் தலா 46 ஓவராக நடத்தப்பட்டது.

pm xi vs ind rohit sharma ind vs aus border gavaskar trophy

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசினர். குறிப்பாக ஹர்ஷித் ராணா நான்கு விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுக்க ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணி 240 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கே எல் ராகுல் 44 பந்துகளை எதிர் கொண்டு 27 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக பெவிலியன் சென்றார். இதேபோன்று முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத கில் இந்த பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 62 பந்துகளில் அரை சதம் எடுத்து அவரும் ரிட்டயர்ட் ஆனார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா மூன்று ரன்களில் வெளியேற நிதிஷ்குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் 36 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் நடக்காமல் இருந்தார்.

ஜடேஜா 27 ரன்களும், சர்பராஸ் கான் 1 ரன்னும் எடுத்து திரும்பினர். இதனால் இந்திய அணி 46 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று வெற்றி இலக்கை கடந்த பிறகும் பயிற்சிக்காக 46 ஓவர் முழுவதையும் இந்திய அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 1, 2024, 20:37 [IST]
Other articles published on Dec 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+