Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PM XI v IND - நினைத்தது எங்களுக்கு கிடைத்தது.. முழு போட்டியும் விளையாட முடியாதது வருத்தம்- ரோகித்

மும்பை : ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிங்க் நிற டெஸ்ட் போட்டி வரும் ஆறாம் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் 11 அணியுடன் விளையாடுகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 240 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கி இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது.

pm xi vs ind rohit sharma ind vs aus border gavaskar trophy

இந்த பயிற்சி ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், கில், நித்திஸ் ரெட்டி ஆகியோர் அபாரமாக விளையாட கேப்டன் ரோகித் சர்மா மட்டும் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஒரு அணியாக எங்களுக்கு எது வேண்டும் என்று நினைத்தமோ, அதை நாங்கள் பெற்று விட்டோம் என்று நினைக்கின்றேன். முழு ஆட்டமும் எங்களுக்கு கிடைக்காதது கொஞ்சம் வருத்தம் தான். எனினும் எங்களுக்கு கிடைத்த நேரத்தை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு தேவையான பயிற்சி கிடைத்திருக்கிறது.

இந்த பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டும் கூட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போட்டியை காணவந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு ஆஸ்திரேலியா வந்து கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரோஹித் பதிலளித்தார். எங்களுக்காக ரசிகர்கள் வந்து ஆதரவு அளித்திருக்கிறதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.

நாங்கள் எப்போதெல்லாம் ஆஸ்திரேலியா வந்து விளையாடுகிறோமோ அப்போதெல்லாம் கூட்டம் இல்லாமல் இருந்தது கிடையாது என்று ரோகித் சர்மா பதில் அளித்தார். இதனை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் கேப்டன் ஜாக் எட்வர்ட்ஸ் அபாரமாக பந்து வீசினார். இந்திய அணி வீரர்களுடன் விளையாடுகிறது மிகவும் கௌரவமாக நினைக்கின்றேன் என்று கூறினார்.

Story first published: Sunday, December 1, 2024, 20:51 [IST]
Other articles published on Dec 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+