Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொலார்டுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது..வெறும் பில்ட் அப் மட்டும் தான்..!!

மும்பை: டி20 கிரிக்கெட் ஆடுவதற்காகவே பிறந்தது போன்ற தோற்றம். எதிரணியை அடிச்சு நொறுக்கும் பேட்டிங்

எதிரணி பேட்ஸ்மேனை திணறடிக்கும் பந்துவீச்சு , பந்து எங்கு சென்றாலும், எப்படி சென்றாலும் அதை பிடிக்கும் திறமை

இப்படி அனைத்தும் கலவையாக உருவானவர் தான் மேற்கிந்தியத தீவுகள் அணி வீரர் பொலார்டு.

சாம்பியன்

சாம்பியன்

மும்பை இந்தியன்ஸ் அணியின் சொத்தாக விளங்கும் பொலார்டு அந்த அணி வென்ற சாம்பியன் பட்டங்களில் பெரும் பங்கு இவருடையது.தற்போது நடைபெற்ற ஐ.பி.எல். தக்கவைக்கும் நிகழ்வில் கூட மும்பை அணி பொலார்டை கைவிடவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு சாம்பியன் வீரர் தான் பொலார்ட், சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவெஞ்சர்ஸ் அணியின் ஹல்க் இவர் தான்

விமர்சனம்

விமர்சனம்

ஆனால், பொலார்ட் வெறும் பில்டப் மட்டும் தான், மற்ற படி அவருக்கு பெரிய சீன் எல்லாம் கிடையாது என்று தெரிவித்துள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேனி மாரிஷன். டேனி மாரிஷனின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெலார்டுக்கும் அவருக்கும் எதாவது பிரச்சினையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாவமான வீரர்கள்

பாவமான வீரர்கள்

மாரிஷன் அதோடு நிற்கவில்லை. வேறு என்ன சொன்னார் தெரியுமா? மும்பை அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் தான் சிறந்த வீரர்கள் என்றும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.தற்போது தான் அவர்கள் தொடர்ந்து ரன் குவித்தன் மூலம் இந்திய அணிக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்

Recommended Video

IPL 2022: Mumbai Indians Predicted Retention List | OneIndia Tamil
சிறந்த அணி

சிறந்த அணி

டேனி மாரிஷன் பொறுத்த வரை சிறந்த ஐ.பி.எல். அணி ஏது தெரியுமா? மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங் அணி இல்லையாம். பெங்களூரு அணி தான் சிறந்த ஐ.பி.எல் அணி என்று கூறியிருக்கிறார் மாரிஷன். பெங்களூரு அணியிடம் ஒரு குறை இருந்ததாகவும், அதனை ஹர்சல் பட்டேல் மூலம் பெங்களூரு அணி நீக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். (ஆனால் பாருங்க ஹர்சல் பட்டேலை பெங்களூரு அணி தக்கவைக்கவில்லை). தனது வித்தியாசமான வர்ணணையாளர் என்று பெயர் எடுத்துள்ள மாரிஷன் தற்போது வித்தியாசமாக யோசிக்ககூடியவர் என்று நிரூபித்துவிட்டார்.

Story first published: Wednesday, December 8, 2021, 23:03 [IST]
Other articles published on Dec 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+