
ஆவேஷ் கான் சொதப்பல்
முழு உடல் தகுதியை பெற்றும், பேட்டிங்கிலும் கலக்கும் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு வாய்ப்பு தராமல், ஆவேஷ் கானை இந்திய அணியில் தொடர்ந்து ரோகித் சர்மா சேர்த்தார். ஆவேஷ் கான் யாக்கர் பந்துகளை நன்றாக வீசுவார் என வாய்ப்பு வாங்கியதற்கான காரணம் சொல்லப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆவேஷ் கான் சொதப்பி வருகிறார்.

டெத் ஓவரில் ஆவேஷ்
ஆவேஷ் கான் சர்வதேச டி20 போட்டிகிளில் டெத் ஓவரில் எப்படி செயல்பட்டு இருக்கிறார் என்பதை தற்போது காணலாம். ஒரு ஒவரில் 14 ரன்கள், ஒரு ஓவரில் 19 ரன்கள், ஒரு ஓவரில் 11 ரன்கள், ஒரு ஒவரில் 20 ரன்கள், 2 பந்தில் 12 ரன்கள், ஒரு ஓவரில் 17 ரன்கள், ஒரு ஒவரில் 21 ரன்கள் என டெத் ஓவரில் 38 பந்துகள் வீசி 114 ரன்களை விட்டு கொடுத்து இருக்கிறார்.

ஏன் வாய்ப்பு
இதில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவ்வளவு ஏன் கத்துக்குட்டி அணியான ஹாங்கங்கிடம் கூட இப்படி சொதப்பினால், ஒன்று அவர் ஃபார்மில் இல்லை என்று அர்த்தம், இல்லை அவருக்கு கடைசி கட்டத்தில் பந்துவீச தெரியவில்லை என்று அர்த்தம். நிலைமை இப்படி இருக்கு ஆவேஷ் கானுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாற்று வீரர்கள்
ஆவேஷ் கானுக்கு பதில் அதிரடி ஆல்ரவுண்டர் தீபக் சாஹரை இந்திய அணி பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்தியாவின் பேட்டிங்கும் அதிகரிக்கும். இல்லையெனில் ஆவேஷ் கானுக்கு பதிலாக அஸ்வின் அல்லது ரவி பிஸ்னாயை இந்திய அணியில் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கி சோதிக்கலாம். ஆனால் அந்த இடத்திற்கு ஆவேஷ் கான் சரிப்பட்டு வர மாட்டார்.


Click it and Unblock the Notifications











