For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 நாள் மேட்ச்சை 3 நாளா மாத்துறாங்க.. கேட்டா இங்கிலாந்துல வெயிலாம்.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு

சென்னை : 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன் ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டுமே பங்கேற்றது.

அந்த நான்கு நாள் பயிற்சி போட்டியையும் மூன்று நாட்களாக குறைத்தது இந்தியா. அது அப்போது விமர்சனத்துக்கு உள்ளானது.

தற்போது முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி இது பற்றி தன் கருத்தை முன்வைத்துள்ளார்.

[மழையா கெடக்கு.. மேட்ச் நடக்க மாட்டேங்குது.. காட்டுக்குள்ள ஜீப் சவாரி போகப் போறோம்]

பயிற்சி போட்டிகள் முக்கியம்

பயிற்சி போட்டிகள் முக்கியம்

பிஷன் சிங் பேடி ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது இந்தியா அடுத்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே பயிற்சி போட்டிகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டு பங்கேற்க வேண்டும். இங்கிலாந்தில் நடந்தது போல எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறினார் அவர்.

ஜோக் அடிக்கிறீர்களா?

ஜோக் அடிக்கிறீர்களா?

மேலும், இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து, இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்தார். "நாம் இங்கிலாந்தில் எசக்ஸ் அணிக்கு எதிராக நான்கு நாள் போட்டியை மூன்று நாட்களாக மாற்றி பங்கேற்றோம். ஏன்? இங்கிலாந்தில் அடித்த வெயில் காரணமாகவா? நீங்க என்ன ஜோக் அடிக்கிறீர்களா" என கேட்டுள்ளார் பிஷன் சிங்.

வெயில் காரணமா?

வெயில் காரணமா?

இவர் இப்படி கூறக் காரணம், இங்கிலாந்தில் பயிற்சி போட்டியின் நாட்களை குறைத்த பின் இந்திய அணி வெயிலை காரணம் காட்டி குறைத்தது என கூறப்பட்டது. ஆனால், ரவி சாஸ்திரி அதை அப்படியே மறுத்தார். எனினும், அவர்தான் நாட்களை குறைத்தார் என பரவலாக பேசப்பட்டது. இங்கிலாந்தில் வெயில் அடிக்கிறது என ஆசிய கண்டத்தில் இருந்து சென்றவர்கள் கூறுவது நம்ப முடியாத விஷயம். காரணம் இங்கிலாந்து பொதுவாகவே குளிர்ந்த பகுதி. வெப்பம் மிதமாகவே இருக்கும்.

மாற்றி மாற்றி பேசும் ரவி சாஸ்திரி

மாற்றி மாற்றி பேசும் ரவி சாஸ்திரி

தற்போது, ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி அதிக பயிற்சி போட்டிகளில் பங்கேற்க விரும்புவதாகவும், ஆனால், அதற்குரிய நாட்கள் இடைவெளி இல்லை என ரவி சாஸ்திரி கூறி இருந்ததும் சர்ச்சை ஆனது. ஏன் அவர் இப்படி மாற்றி மாற்றி பேசி வருகிறார் என செய்திகள் வெளி வந்தன. இதை தான் பிஷன் சிங் பேடி சுட்டிக் காட்டியுள்ளார்.

Story first published: Saturday, October 13, 2018, 19:09 [IST]
Other articles published on Oct 13, 2018
English summary
Practice match in England Tour is not taken serious by Indian cricket team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X