For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாரும் இதை செய்வாங்க.. ஆனால் பாக். வீரர்கள் ரொம்ப ஏமாற்றுவாங்க.. முன்னாள் வீரர் தடாலடி பேட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்றால் பழைய பந்தை பயன்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் முறையில் விக்கெட்டுகளை எடுப்பது காலம் காலமாக வேகபந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி வரும் கலை ஆகும்.

ஒரு நாள் கிரிக்கெட்டிலும் இந்த கலை பவுலர்களுக்கு கை கொடுத்து வந்தது. ஆனால் எப்போது ஒவ்வொரு முனையிலும் ஒரு புதிய பந்து என்ற இரண்டு பந்துகள் பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து ரிவர்ஸ் ஸ்விங் ஒருநாள் கிரிக்கெட்டில் கை கொடுக்கவில்லை.

 Praveen kumar controversial remark on pakistan cricketers over reverse swing

இந்த நிலை பந்து ரிவர்ஸ்விங் செய்யப்படுவதற்காக வீரர்கள் தங்களது எச்சிலை பயன்படுத்துவார்கள். ஆனால் கொரோனாவுக்கு பிறகு இதை ஐசிசி தடை செய்துவிட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரான பிரவீன் குமார் பந்தை எவ்வாறு ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வைப்பார்கள் பேசியபோது சர்ச்சையான ஒரு கருத்தை கூறியிருக்கிறார்.

அதில் பந்தை கொஞ்சம் சேதப்படுத்தினால் மட்டுமே பந்து நன்றாக ரிவர் ஸ்விங் ஆகும். இதனால் அனைவருமே கொஞ்சம் கொஞ்சம் பந்தை சேதப்படுத்துவார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் மட்டும்தான் அதிக அளவு பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்கள். இதை நான் என்னுடைய சீனியர் வீரர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். ஆனால் தற்போது கேமராக்கள் மைதானத்தை சுற்றி இருக்கிறது.

முன்பு அனைவரும் இந்தத் தவறை செய்து கொண்டு வந்தார்கள். ஆனால் தற்போது கேமராக்கள் இருப்பதால் பந்தை நீங்கள் சேதப்படுத்தினால். அனைவருக்கும் தெரிந்து விடும் பந்தை ரிவர்ஸ்விங் செய்வதற்காக ஒரு பகுதியை மட்டும் சேதப்படுத்துவார்கள். ஆனால் அந்த பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற திறமை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

நான் பந்தை தேய்த்து சேதப்படுத்தி வேறு ஒருவரிடம் கொடுத்திருந்தால் அவருக்கு அந்த பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தால் மட்டுமே நன்மை கிடைக்கும். ரிவர்ஸ்விங் செய்து கொள்ள அந்த கலையை வீரர்கள் கற்க வேண்டும் என்று பிரவீன் குமார் கூறியிருந்தார். பிரவீன் குமாரின் இந்த பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 37 வயதான பிரவீன்குமார் ஆறு டெஸ்ட், 68 ஒரு நாள் மற்றும் பத்து டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளில் களமிறங்கி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Monday, January 8, 2024, 21:39 [IST]
Other articles published on Jan 8, 2024
English summary
Praveen kumar controversial remark on pakistan cricketers over reverse swing எல்லாரும் இதை செய்வாங்க.. ஆனால் பாக். வீரர்கள் ரொம்ப ஏமாற்றுவாங்க.. முன்னாள் வீரர் தடாலடி பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+