
ஓப்பனிங்
இதனால் விழா காலத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன்பதிவு செய்யும் கூட்டத்தை போல், ஒரு இடத்திற்கு நான்கு இந்திய வீரர்கள் போட்டி போடுகின்றனர். கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்தனர். தற்போது இளம் வீரர்கள் சுப்மான் கில்லும், மாயங் அகர்வாலும் அசத்தியுள்ளனர்

காத்திருக்கும் வீரர்கள்
இவர்களை தவிர தென்னாப்பிரிக்கா ஏ தொடரில் விளையாடிய பிரியங் பாஞ்சல், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரும் கலக்கி உள்ளனர்.இதில் அனைவருமே தொடக்க வீரர்கள் என்பதால் அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு இயற்கையாகவே அழுத்தம் ஏற்படும்

வாய்ப்பு
இதே போன்று நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி உள்ளிட்ட வீரர்களும், விக்கெட் கீப்பருக்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், பரத், சாஹா போன்ற வீரர்களும் சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் என 3 வீரர்களும் உள்ளனர். இதில் யாருக்காவது வாய்ப்பு தரவில்லை என்றால் ரசிகர்களும் நம்மை வறுத்து எடுத்துவிடுவார்களே என்ற அச்சமும் பி.சி.சி.ஐ.க்கு இருக்க தானே செய்யும்.
Recommended Video

வேறு வழி
ஒரு காலத்தில் தொடக்க வீரர் என்றால் இவர் தான், அவருக்கு பதில் வேறு ஆளே கிடையாது என்ற நிலை மாறி தற்போது ஒரு இடத்திற்கு இத்தனை பேர் போட்டியிடுவது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமான விஷயம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டிக்கு ஒரு அணி, ஒருநாள் போட்டிக்கு ஒரு அணி என்று இருவேறு அணிகளை உருவாக்கினால், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் யோசனை தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











