Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேல் ஸ்டெயின் புயலா... கிறிஸ் கெயில் சுனாமியா..? தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் நாளை மோதல்!

சிட்னி: பந்து வீச்சில் பலமான தென் ஆப்பிரிக்காவும், பேட்டிங்கில் விளாசும் வெஸ்ட் இண்டீசும் நாளை பலப் பரிட்சை நடத்த உள்ளன.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோத உள்ளன.

இரு அணிகளும் எப்படி

இரு அணிகளும் எப்படி

மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்திடம் தோல்வியும், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளிடம் வெற்றியும் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவை பொறுத்தளவில், ஜிம்பாப்வேயிடம் வெற்றியும், இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துள்ளது.

பவுலிங், பேட்டிங்

பவுலிங், பேட்டிங்

தென் ஆப்பிரிக்காவில் ஸ்டெயின், மோர்கல் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மே.இ.தீவுகளில் கடந்த போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 215 ரன்கள் விளாசிய கிறிஸ்கெயில், சாமுவேல்ஸ், ஸ்மித் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். எனவே இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்

தென் ஆப்பிரிக்க அணி விவரம்

ஏபிடி வில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, குயின்டர் டி காக் (விக்கெட் கீப்பர்), டு பிளிசிஸ், டேவிட் மில்லர், டுமினி, பர்கான் பெகர்டின், மோர்ன் மோர்கல், டேல் ஸ்டெயின், வெரோன் பிலான்டர், இம்ரான் தாகிர், கைல் அப்பாட், ரில்லே ருஸ்சவு, ஆரோன் பன்கிஸோ, வைன் பர்னல்.

மேற்கிந்திய தீவுகள் விவரம்

மேற்கிந்திய தீவுகள் விவரம்

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜோனாதன் கார்டர், ஷெல்டன் கோட்ரெல், கிறிஸ் கெயில், தினேஷ் ராம்டின், கெமர் ரோச், ஆன்ட்ரே ரசல், டேரன் சமி, லென்ட்ல் சிமன்ஸ், ட்வைன் ஸ்மித், ஜெரோம் டைலர், நிகிதா மில்லர்.

Story first published: Thursday, February 26, 2015, 17:50 [IST]
Other articles published on Feb 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+