Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது லட்டு தின்ன ஆசையாக காத்திருக்கும் குஜராத் லயன்ஸ்..!

மும்பை: முதல் இரு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ள புதுமுக அணியான குஜராத் லயன்ஸ் அடுத்து வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியைச் சாய்க்க ஆவலாக காத்திருக்கிறது. இரு அணிகளும் நாளை மோதவுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.

புள்ளிகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தை வீழ்த்தி தனது நிலையை ஸ்திரமாக்கும் ஆர்வத்திலும் உள்ளது மும்பை இந்தியன்ஸ். இரு அணிகளும நாளை நடைபெறும் போட்டியில் சந்திக்கவுள்ளன.

Preview: IPL 2016 Match 9: Mumbai Indians Vs Gujarat Lions

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய அவமானமே புதிய அணியான புனே ரைசிங் சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியிடம் பெற்ற 9 விக்கெட் வித்தியாசத்திலான தோல்விதான். ஆனால் டோணி தலைமையிலான அணி என்பதால் இந்த வெற்றி புனேவுக்கு சாத்தியமாயிற்று.

ஆனால் நாளைய போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத்திடமும் இப்படித் தோல்வியுற்று விடக் கூடாது என்ற வேகத்தில் உள்ளது மும்பை. அதேசமயம், புனே அணியைப் புரட்டிப் போட்டது போல மும்பையையும் ஒரு கை பார்க்க குஜராத் தயாராகி வருகிறது.

மும்பை அணி முதல் போட்டியில் புனேவிடம் தோற்றபோதும், 2வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருந்தது. எனவே குஜராத் சவாலையும் சந்திக்க அது ஆயத்தமாகவே உள்ளது.

கடந்த ஆண்டும் இப்படித்தான். தொடர்ந்து நான்கு தோல்விகளைச் சந்தித்தது மும்பை. ஆனால் அதன் பின்னர் அப்படியே மாறி, அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்ததோடு கடைசியில் பட்டத்தையும் தட்டிச் சென்று அசத்தியது. அதே பாணியில் இந்த முறையும் தொடக்க ஆட்டத்தில் அது தோற்றாலும் கூட தற்போது அது சுதாரித்து விட்டது.

மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, கொல்கத்தா போட்டியின்போது அதிரடியாக ஆடி அசததினார். அதேபோல ஜோஸ் பட்லர் இருக்கிறார். நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மெக்ளனகன் இருக்கிறார். அதேபோல ஹர்திக் பாண்ட்யா வேறு இருக்கிறார். எனவே மும்பைக்கு பலவீனத்தை விட பலமே அதிகம்.

அதேசமயம், குஜராத் அணியிலும் திறமைக்குப் பஞ்சமில்லை. கேப்டன் ரெய்னா இருக்கிறார். மெக்கலம், பிராவோ, ஆரோன் பின்ச், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் என வரிசையாக பலரும் உள்ளனர்.

தினேஷ் கார்த்திக் அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வருகிறார். ஜடேஜாவின் பந்து வீச்சு நன்றாகவே உள்ளது. இதெல்லாம் குஜராத்துக்கு சாதகமான அம்சங்களாகும்.

மொத்தத்தில் மும்பைக்கு சற்றும் சளைக்காத ஜாம்பவானாகவே காட்சி தருகிறது குஜராத்... 3வது லட்டு அதற்குக் கிடைக்குமா என்பது மும்பை அணி ஆடும் விதத்தில்தான் உள்ளது.

பார்க்கலாம்.

Story first published: Friday, April 15, 2016, 14:03 [IST]
Other articles published on Apr 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+