Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது லட்டு சாப்பிட ஆசைப்படும் 2 அணிகள்.. அதிரஷ்டம் யாருக்கு?

கொல்கத்தா: இன்று இரவு அனல் பறக்கும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், மேற்கு இந்தியத் தீவுகளும் மோதவுள்ளன. இதில் இங்கிலாந்தும், மேற்கு இந்தியத் தீவுகளும் ஆளுக்கு ஒருமுறை சாம்பியனாகியுள்ளன.

இன்றைய இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையைத் தட்டிச் செல்ல இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது.

மறுபக்கம் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் 2வது முறையாக சாம்பியனாகி விட வேண்டும் என்ற மும்முரத்தில் உள்ளது. தற்போது அந்த அணி அட்டகாசமான பார்மில் உள்ளதாலும், வலுவான இந்தியாவையே வீழ்த்தி விட்டதாலும், நிச்சயம் பட்டம் நமக்குத்தான் என்ற பெரும் நம்பிக்கையில் அந்த அணி உள்ளது.

செம ஆட்டம்

செம ஆட்டம்

தற்போது டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆடி வரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இப்படி அசத்தும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்படி ஒரு அருமையான ஒருங்கிணைப்புடன் அவர்கள் ஆடி அசத்தி வருகிறார்கள்.

ஒரே ஒரு (கேவலமான) தோல்வி மட்டுமே

ஒரே ஒரு (கேவலமான) தோல்வி மட்டுமே

இந்தத் தொடரில் தான் சந்தித்த அத்தனை போட்டிகளிலுமே மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பராக ஜெயித்துள்ளது.. ஆப்கானிஸ்தானுடன் கேவலமாக தோற்ற ஒரு போட்டியைத் தவிர.

உலகத்தையே எதிர்க்கிறோம்

உலகத்தையே எதிர்க்கிறோம்

இன்றைய போட்டி குறித்து கேப்டன் டேரன் சமி கூறுகையில் உலகத்தையே எதிர்ப்பது போல எங்களுக்குத் தோன்றுகிறது. நாட்டுக்காக நாங்கள் விளையாடுவதில்லை. பணத்துக்காக விளையாடுகிறாோம் என்று பலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தொடரில் நாங்கள் பதிலடி கொடுத்து வருகிறோம் என்றார் அவர்.

2வது முறை

2வது முறை

இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டு தொடரை வென்று சாம்பியனானது. 2012ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இன்றைய போட்டியில் யார் வென்றாலும் அது அவர்களுக்கு 2வது கோப்பையாகும்.

1987க்குப் பிறகு கொல்கத்தாவில்

1987க்குப் பிறகு கொல்கத்தாவில்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 1987ம் ஆண்டுதான் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. அதன் பிறகு 29 வருடம் கழித்து இப்போது மீண்டும் இங்கு உலகக் கோப்பைப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு ராசியில்லாத மைதானம்

இங்கிலாந்துக்கு ராசியில்லாத மைதானம்

1987ல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த ராசி இங்கிலாந்துக்குக் கவலை தரும் விஷயமாகும்.

மாற்றிப் போடுவாரா மார்கன்

மாற்றிப் போடுவாரா மார்கன்

ஆனால் இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது நல்ல பார்மில் இருப்பதால் மேற்கு இந்தியத் தீவுகளை வெல்லும் என்று இங்கிலாந்து ரசிகர்ள் நம்புகிறார்கள்.

சூப்பர் பார்மில் மேற்கு இந்தியத் தீவுகள்

சூப்பர் பார்மில் மேற்கு இந்தியத் தீவுகள்

அதேசமயம், மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் ஸ்டார் வீரர்களான சுனில் நரீன், கீரன் போலார்ட், டேரன் பிராவோ ஆகியோர் இல்லாமலேயே அசத்துகிறது. அதை விட கெய்ல் ஆடாவிட்டாலும மற்றவர்கள் வெளுத்து விடுகிறார்கள்.

சிங்கம் போல சிம்மன்ஸ்

சிங்கம் போல சிம்மன்ஸ்

சிம்ன்ஸ் அசத்துகிறார். பிளட்சர் பிரித்து மேய்கிறார். கேப்டன் சமி, ஆல் ரவுண்டர் வேயன் பிராவோ ஆகியோரும் தக்க சமயத்தில் எதிரணிகளை தாளித்து எடுக்கத் தவறுவதில்லை.

ஜோரான ரூட்

ஜோரான ரூட்

மறுபக்கம் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் பிரமாதமாக ஆடி வருகிறார். மொயீன் அலி உள்ளிட்டோரும் இங்கிலாந்து அணிக்கு பலமாக விளங்குகிறார்கள். அலெக்ஸ் ஹால்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் நல்ல தொடக்கம் தரக் காத்துள்ளனர். ஜாஸ் பட்லரும் பக்க பலமாக இருக்கிறார். எனவே இங்கிலாந்து அணியும் நல்ல நிலையில்தான் இருக்கிறது.

மொத்தத்தில் இரு அணிகளும் நல்ல பலத்துடன் இருப்பதால் போட்டியில் பட்டாசு வெடிக்கும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, April 3, 2016, 11:34 [IST]
Other articles published on Apr 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+