For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலக கோப்பை: மும்பையில் நாளை மதியம் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து மோதல்

By Veera Kumar

மும்பை: உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் சூப்பர்-10 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

பயிற்சியாட்டத்தின்போது இந்தியாவிடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்று அசத்தியது. இங்கிலாந்து அணி, தனது பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் மும்பை அணியை வீழ்த்தியது.

Preview: World T20: West Indies Vs England in Mumbai

டேர்ரன் சம்மி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் உலகின் பல நாட்டு உள்ளூர் டி20 தொடர்களில் ஆடி அனுபவம் பெற்றுள்ளனர். ட்வைன் பிராவோ, ஆன்ட்ரே ரசல் ஆகியோரின் பந்து வீச்சை அந்த அணி பெரிதும் நம்பிக்கொண்டுள்ளது.

இதுவரை மோதிய 9 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் 5 போட்டிகளிலும், இங்கிலாந்து 4 போட்டிகளிலும் வென்றுள்ளன. இதில் உலக கோப்பை போட்டிகளில் தலா 3 முறை வென்றதும் அடங்கும்.

இங்கிலாந்தை பொறுத்தளவில் இயோன் மோர்கன், மொயீன் அலி, ஜோ ரூட், ஜோஸ் பட்லர் உள்ளிட்டோர் அடங்கிய வலுவான பேட்டிங் லைனை கொண்டுள்ளது. இருப்பினும், ஸ்பின்னுக்கு சாதகமான மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், அந்த வகை பந்துகளை எந்த அணி திறம்பட எதிர்கொள்கிறது என்பதை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும்.

இப்போட்டி நாளை மதியம் 3 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.

Story first published: Tuesday, March 15, 2016, 18:13 [IST]
Other articles published on Mar 15, 2016
English summary
With a plethora of players plying their trade in professional leagues around the world, West Indies will take on a well-balanced England in what could be a potentially close Super 10 Group 1 fixture of the ICC World Twenty20 here tomorrow (March 16).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+