Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட்டி சேவாக்கை மறந்துவிடாதீர்கள்.. இங்கிலாந்தில் சம்பவம் செய்த இந்திய வீரர்

லண்டன்: துர்ஹம் அணிக்கு எதிரான போட்டியில் நாட்டிங்ஹம்ஷையர் அணிக்காக களமிறங்கிய இந்திய வீரர் பிரித்வி ஷா 71 பந்துகளில் ஒரு சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3 ரன்களில் சதத்தை இழந்த பிரித்வி ஷா, சோகமாக பெவிலியன் திரும்பிய வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியாவின் அடுத்த கேப்டனாக வருவார் என்று சொல்லப்பட்ட பிரித்வி ஷா, தற்போது இந்திய அணியில் கூட இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 106 ரன்களை மட்டுமே சேர்த்த பிரித்வி ஷா, கடந்த சீசனில் 198 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் பிரித்வி ஷாவால் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடியவில்லை.

IND vs SL Rohit Sharma Prithvi Shaw


இதற்கு முக்கியமான காரணம் பிரித்வி ஷாவின் ஷார்ட் பால் பிரச்சனை தான். இதனை சரி செய்திருந்தால், பிரித்வி ஷாவால் எளிதாக இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாறியிருக்க முடியும். ஆனாலும் பிரித்வி ஷா அதற்கான முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ரஞ்சி டிராபி போட்டிகள் இல்லையென்றால் கூட இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஒருநாள் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில் நாட்டிஹம்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரித்வி ஷா, இன்றைய ஆட்டத்தில் துர்ஹம் அணிக்கு எதிராக களமிறங்கினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். ஜார்ஜ் பேர்லட்டுடன் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரித்வி ஷா, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். ஒரு கட்டத்தில் சதம் அடிப்பார் என்று கருதப்பட்ட சூழலில், 71 பந்துகளில் ஒரு சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் 3 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஸ்காட் பார்த்விக் வீசிய பந்து ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற பிரித்வி ஷா, வேகம் குறைவாக வந்ததை கணிக்காமல் பேட்டை வீசினார். அது டாட் எட்ஜாகி கீப்பருக்கு பின் நின்ற ஃபீல்டரின் கைகளில் நேராக சென்று விழுந்தது. ஏற்கனவே ஆடிய 3 இன்னிங்ஸில் 9, 40 மற்றும் 76 ஆகிய ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 2, 2024, 21:14 [IST]
Other articles published on Aug 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+