Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை மன்னித்து விடு தம்பி! நான் உன் பெரிய அண்ணன் மாதிரி.. முஷிர் கானிடம் மின்னிப்பு கேட்ட பிரித்வி

மும்பை: ரஞ்சி கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் மும்பை அணி வீரர் முஷிர் கானை அடிக்க பாய்ந்த சம்பவம் குறித்து பிரித்வி ஷா தற்போது மன்னிப்பு தெரிவித்திருக்கிறார். ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்த பிரித்வி ஷா கிரிக்கெட் மீதான கவனம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு சர்ச்சை சம்பவங்களில் சிக்கினார்.

இதனால் அவருடைய கிரிக்கெட் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி ஐபிஎல் அணி ரஞ்சி அணி என அனைத்திலும் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் மும்பை அணியில் இருந்து வெளியேறிய பிரித்விஷா தற்போது மகாராஷ்டிரா ரஞ்சி அணியில் இணைந்திருக்கிறார்.

Prithvi Shaw

இந்திய அணியில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என கடுமையாக முயற்சி செய்து வரும் பிரித்வி ஷா தற்போது ரஞ்சி பயிற்சி ஆட்டம் ஒன்றில் மும்பை அணிக்கு எதிராக பங்கேற்றார். இதில் 181 ரன்கள் குவித்து அசத்தினார். அப்போது அவரை அவுட் ஆக்கிய முஷிர்கானை பிரித்விஷா அடிக்க பாய்ந்து மோதலில் ஈடுபட்டார்.

இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்று மும்பை வீரர் சித்தார்த் உடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமது செயலுக்கு முஷிர் கானிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரித்வி அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தான் செய்தது தவறுதான். முஷிர் கான் எனக்கு தம்பி போல் உள்ளவர்.

நான் அவருடைய பெரிய அண்ணன் மாதிரி என்று அவர் மன்னிப்பு கூறியுள்ளார்.இதனிடையே மகாராஷ்டிரா ரஞ்சி அணியில் பிரித்விஷா சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அணியில் தேர்வாகி இருக்கிறார்.

முஷிர் கான் இடம் மன்னிப்பு கேட்டு இருப்பதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று மும்பை கிரிக்கெட் அணி சார்பாகவும் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் திலீப் வெங்சர்காரிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Story first published: Friday, October 10, 2025, 14:17 [IST]
Other articles published on Oct 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+