Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலியோடு தான் விளையாடினேன்.. இன்றைய ஆட்டத்திற்காக கடுமையாக உழைத்தேன்.. பிரித்வி ஷா உருக்கம்

தர்மசாலா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த சில ஆட்டங்களில் விளையாடாமல் இருந்த பிரித்திவிஷா பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 38 பந்துகள் எதிர் கொண்டு 54 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஏழு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்த நிலையில் செய்தியாளிடம் பேசிய பிரித்வி ஷா களத்திற்கு வந்து ரன்கள் சேர்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் வாய்ப்புக்காக சில சமயம் நாம் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.

Prithvi shaw says he was playing with injury finger

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆடுகளத்தில் பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. முதல் சில ஓவர்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எனினும் பந்து பழையதாக மாறியவுடன் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் மாறும்.

மேலும் பனிபொழிவும் இருந்ததால் பந்துவீச்சாளர்களும் கடும் நெருக்கடியில் இருந்தார்கள். பில்டர்கள் இடையே உள்ள கேப்பை பார்த்து நாம் அடித்தால் நிச்சயமாக ரன்கள் கிடைக்கும். எனது விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. இன்னும் வழி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதையும் மீறி தான் இன்றைய ஆட்டத்தில் விளையாடினேன்.

போகப்போக அது சரியாக விடும் என நினைக்கிறேன். நாங்கள் அடித்தது நல்ல ஸ்கோர் தான். பவர் பிளேவில் நாங்கள் சேர்ப்பது கொஞ்சம் கடினமாக எதிரணிக்கு இருக்கும்.

பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் வீச வேண்டும். பனிபொழிவு காரணமாக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடும். இதனால் பந்தின் வேகத்தை குறைவாக வீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். பந்தின் வேகத்தை குறைத்து வீசுவது இன்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன் என்று பிரித்விஷா கூறினார்.

Story first published: Wednesday, May 17, 2023, 22:23 [IST]
Other articles published on May 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+